பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金&6 பரகாலன் பைத்தமிழ்

கண்ணபிரான் செய்யும் தீமைகளைப் பட்டியலிட்டுப் பாசுரமாகச் சொல்லில் கண்ணெச்சில் படும் என்று பொதுப் படையாகப் பிள்ளைகள் செய்வன செய்யாய்: என்றும் பேசில் பெரிதும் வலியை’ என்றும் சொல்லுகின் றாள் என்பதை உணர்ந்து அநுபவிக்க வேண்டும்.

பெரியாழ்வாரும் ஒருதிருமொழியில் (2.2) இங்ங்ணம் கண்ணனை அநுபவிக்கின்றார். இரண்டையும் ஒப்பிட்டு அநுபவிக்கலாம். பெரியாழ்வார் திருமொழி உச்சிப் போதில் முலையுண்ண அழைப்பதுபோல் அமைந் துள்ளது. இத்திருமொழி அந்தியம் போதில் முலையுண்ண வருமாறு அழைப்பதுபோல் அமைந்துள்ளது.

மற்றொரு திருமொழி (10.5) சப்பாணி கொட்டு தல்' என்ற விளையாட்டை நுவல்வது. இந்த விளை யாட்டை அக்காலத்தில் யசோதைப் பிராட்டி கண்ண னைப் பிரார்த்தித்து அநுபவித்தாள். இதைப் பெரியாழ் வார் மாணிக்கக் கிண்கிணியார்ப்ப (1.6) என்ற திரு மொழியில் அநுகரித்து அநுபவித்தார். கலியனும் அதனை இத்திருமொழியில் அநுபவிக்கின்றார் யசோதை நிலையில் இருந்து கொண்டு.

பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணெய் புக்குண்ண ஆங்கவள் ஆர்த்ததுப் புடைக்கப் புடையுண்டு ஏங்கியிருந்து சிணுங்கி விளையாடும் ஒங்கோத வண்ணனே! சப்பாணி;

ஒளிமணி வண்ணனே சப்பாணி (1) (பூகோதை-பூவை அணிந்த மயிர் முடி; கடைகடையப்பெற்ற புக்கு-புகுந்து, ஆர்த்து-கட்டி; புடைக்க-அடிக்க; சிணுங்கி-சீராட்டப் பெற்று; ஓங்கு ஒதம்-தேங்கின. கடல்)

11. சப்பாணி கொட்டுதல். ஒரு கையோடு மற்றொரு

கையைச் சேர்த்துக் கொட்டுதல்.