பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 堡&7

என்பது முதல் பாசுரம், யசோதைப் பிராட்டி பேசுகின்ற இப்பாசுரத்தில் பூங்கோதையாய்ச்சி' என்று தன்னையே படர்க்கையாகச் சொல்லிக் கொண்டபடி, பெரியாழ்வார் திருமொழியிலும் சீதக்கடல் (1 2). இப்படி அடிக்கடி வருதலைக் காணலாம்.

'யசோதைப் பிராட்டிக் கடைந்த வெண்ணெயைக் கள்ள வழியால் வாரி விழுங்கியதால் அவள் அவனைப் பிடித்துக் கொண்டு கண்ணி நுண்சிறுத்தாம்பினால் கட் டிப் புடைக்க, அதனால் சிறிது நேரம் வருந்திக் கிடந்து பின்னையும் அவள் சீராட்டியதனால் விளையாட்டில் இழிகின்ற கடல்வண்ணனே! சப்பாணி கொட்டுக!” என்று பிரார்த்திப்பது இப்பாசுரம். இத்திருமொழியில் கண்ணபிரான் செய்த சிறுகுறும்புகளையும் அசாதாரணச் செயல்களையும் யசோதை வாக்காகச் சொல்லிச் சொல்வி அநுபவித்து மகிழ்கின்றார் ஆவார்.

இராமாவதாரத்தை அநுபவித்த இரண்டு திருமொழி களில் இராக்கதர்களின் நிலைமையை ஏறிட்டுக் கொண்டு பேசினார்; ஈண்டு யசோதைப் பிராட்டியின் நிலையை ஏறிட்டுக் கொண்டு பேசுகின்றார். பகவத் விஷயத்தை அநுபவிக்கும்போது வெறுப்புக்கும் விருப்புக்கும் வேறு பாடு இல்லை, இரண்டாலும் பகவானுடைய திருக்குணங் கள் எடுத்துரைக்கப்பெற்று அநுபவிப்பதால்.

உறுப்புகளால் அநுபவித்தல் : கண், செவி, வாய், மூக்கு முதலிய உறுப்புகள் எம்பெருமானால் நமக்கு அளிக்கப் பெற்றது அவற்றால் பகவத்விஷயா நுபவம் பெறுவதற்காக; பெற்றுக் களிப்பதற்காக. இத்திருமொழி (1.1.7) தம்முணர்வைப் பலரும் தெரிந்து கொள்ளுமாறு அருளிச் செய்யப்பெற்றது. இஃது ஒருவித இறை அயநுபவம்.