பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 491

சீவான்மா தனக்கு எப்பொழுதும் தோன்றிக்கொண்டே இருக்கும். தன்னை நான்’ என்று அறியும் பொழுது தர்மபூதஞானம் உதவ வேண்டும் என்பதில்லை. ஆனால் சீவான்மா தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தன் தர்மபூதஞானத்தால் மட்டிலுமே அறிய முடியும். தன் சொரூபத்தைத் தர்மபூதஞானத்தைக் கொண்டும் அறியலாம். ஆன்மா இறைவன் ஏவியபடி நடப்பது; அவனால் தரிக்கப்பெற்று, அவனுக்கு அடிமையாகவே இருப்பது.

சித்தின் வகை : சீவான்மாக்கள் எண்ணற்றவர், இவர்களின் தொகுதி பத்தர் (தளைப்பட்டிருப்பவர்), முத்தர், நித்தியர் என்னும் வேற்றுமையால் மூவகைப் பட்டிருக்கும். இவர்களுள் பத்தர் என்பவர், மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய காலமும் கனக் கும் நீத்த க்ாரணனின், மாயையால் மறைக்கப் பெற்ற சொரூபத்தையுடையவர்கள்; அநாதி அஞ்ஞானத்தால் தேடிய புண்ணிய பாவங்களால் (வினையினால்) சூழப் பெற்றவர்கள்; இவர்கள் அவரவர்களில் வினைக்குத் தக்கவாறு மாறி மாறித் தேவ, மனித விலங்கு, தாவர வடிவங்களைப் பெற்றுத் துக்க பரம்பரைகளை அதுப விக்கும் சம்சாரிகளாவர். நம் போலியர் இவர்களுள் அடங்குவோம். முத்தர் என்பவர், இவ்வுலகத் தளைகள் கழிந்து பரம பதத்தில் பகவதநுபவ கைங்கரிய போகரான வர்கள் ஆவர். முமுட்சு நிலையிலிருந்து மோட்சத்தை அடைபவர்கள் இந்தக் குழுவில் அடங்குவர். கித்தியன் என்பவர், ஒருநாளும் சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத அனந்தன் கருடன் சேனை முதலியார் (விஸ்வக்சேனர்) தொடக்கமானவர்கள்,

1. வினை மூவகைப்படும். இப்பிறப்பிற்கு முன்னைய பிறப்புகளில் செய்த வினைகளுள் இப்பிறப்பில் அநுபவத்திற்கென்று அளந்து