பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 495.

டமாக இருப்பவன்; தனக்கு ஒப்பாரும் மிககாரும் இல்லா தவன். ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம் தேஜஸ் முதலிய மங்கள சூனக கூட்டங்களால் அலங்கரிக் கப் பெற்றவன். அவனிடம் இக்குணங்கள் ஆதல்;அழிதல் இன்றி எப்பொழுதும் நிறைந்திருக்கும. இவற்றைத் தவிர வாத்சல்யம், செளலப்பியம், செளசீல்யம் முதலிய எண் ணற்ற குணங்களையும் கொண்டவன்".

இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் காரணபூதன்.

பூவளர் உந்திதன்னுள் புவனம் படைத்து

உண்டு உமிழ்ந்த

தேவர்கள் நாயகன் (9.9:1)

உடம்புருவல் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய்

உலகுய்ய நின்றானை (2.5:3)

என்பர் திருமங்கையாழ்வார். திருநெடுந் தாண்டகத்தில் ஒரு பாசுரம் இக்கருத்துகளைத் தெளிவாக விளக்கு கின்றது.

பார் உருவி நீர்எரிகால் விசும்பு மாகிப்

பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற ஏர்உருவில் மூவருமே என்ன நின்ற

இமயவர்தம் திருவுருவே றெண்ணும்போது ஓர் உருவம் பொன்னுருவம்; ஒன்று செந்தி ஒன்றுமா கடல்உருவம்; ஒத்து நின்ற மூவுருவம் கண்டபோ தொன்றாம் சோதி

முகிலுருவம் எம்மடிகள் உருவந்தானே (2)

4. முத்திகெறி-கடிதம் 6-பக் 49 55 விவரம் காண்க,