பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

495 பரகாலன் பைந்தமிழ்

|பார் - பூமி, கால் - காற்று விசும்பு ஆகாயம்;

சமயம்-ஏற்பாடு, பரந்து-வியாபித்து; ஏர். அழகிய; இமையவர்-தேவர்; வேறு-தனித்தள் யாகப் பிரித்து; ஒத்துநின்ற சேர்ந்திருக்கும் போது; முகில்-காளமேகம்)

இப்பாசுரத்தில் முத்தொழில்களைச் செய்யும் மும்மூர்த்தி களைப் பேசி நான்முகன் பரமசிவன் ஆகிய இருவர் சேஷபூதராய், சிருஷ்டிக்கப்படுகின்றவராய், சரீரபூதராய் இருப்பதையும், நாராயணன் சேஷியாய், சிருஷ்டி செய்ய வராய் சரீரியாய் இருப்பதையும் காட்டுகின்றார்.

திருமால், நான்முகன், சிவன் என்ற மும்மூர்த்திகளின் உருவங்களை ஆராயுமிடத்து நான்முகன் உருவம் பொன் விறமானது; சிவனுடைய வடிவம் சிவந்த தீ வடிவினது; நாராயணன் வடிவம் கருங்கடல் வடிவினது. இம் மும் மூர்த்திகளையும் பிரமாணங் கொண்டு பரிசீலனை செய்யு மிடத்து ஐம்பெரும் பூதங்களை உண்டாக்கியும் பல வகைப்பட்ட சமயங்களை (ஏற்பாடுகளை)யுடைய சகத்தைப் படைத்தும், இப்படிப் படைக்கப்பட்ட சகத் தில் அந்தர்யாமியாய் வியாபித்தும் நிற்கின்ற எம்பெரு மானுடைய உருவம் காளமேக உருவமாக இருக்கும் என்று சொல்லப் படுகின்றதால், முகிலுருவமுடையவனே எம்பெருமான் என்பது உறுப்படுகின்றது.

பார் உருவி : பார் பூமிக்கு விசேடணம். அண்ட காரணமான ஐம்பெரும்பூதங்களைச் சிருட்டித்தவன் என்பதை முதல் அடி குறிப்பிடுகின்றது. இவற்றைச் சிருட்டித்த எம்பெருமானுக்கு அண்டத்தில் பிறந்தவர் களான நான்முகன் முதலானாரோடு சமம் என்று ஐயுற இடம் இல்லை என்பதை தெளிவு படுத்துவதற்காக இங்ங் னம் குறிப்பிடப் பெற்றது.