பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 全9?

படைப்பு இருவகைப்படும். அவை சமஷ்டி சிருஷ்டி, வியஸ்டி சிருஷ்டி என்பன. இவற்றுள் நாமரூப வியாகம் இல்லாதது சமஷ்டி சிருஷ்டி, அஃது உள்ளது வியஷ்டி சிருஷ்டி. பார் உருவி நீர் எரிகால் விசும்புமாகி என்றது சமஷ்டிசிருஷ்டியைச் சொன்னவாறாம். பல்வேறு சமய முமாய் என்றது வியஷ்டி சிருஷ்டியைச் சொன்னவாறாம். அதாவது பல்வேறு தேவர், மானிடர், விலங்குகள், தாவ ரங்கள் என்று பலவகைப்பட்ட பாகுபாடுகளையுடைய சகத்தை உண்டாக்கினவன் என்பதை விளக்கினபடி யாகும். சமயம்-ஏற்பாடு. தேவதைகள் ஆராதிக்க உரியராயும் அமுதம் உண்பவராயும் இருத்தல் அவர்களுக் கான ஏற்பாடு; மனிதர்கள் ஆராதனை செய்பவர்களாயும் உணவு உண்பவர்கள்ாயுமிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு; விலங்குகளும் தாவரங்களும் ஆராதனைக்குக் கருவியாக இருத்தல் அவற்றுக்கான ஏற்பாடு.

மூவருமே என்ன கின்ற இமையவர்: படைத்தல், காத் தல், அழித்தல் என்பன மூன்று தொழில்கள். இவை மூன்றையும் நாராயணன் ஒருவனே நிர்வகித்தாலும், அவனே நான்முகனிடம் உள்புகுந்து படைத்தலையும், உருத்திரனிடம் உள்புகுந்து அழித்தலையும், தானான தன்மையிலேயே காத்தலையும் நடத்தி வருவதையும் கண்டு இந்த மூன்றுக்கும் ஒருவனே தலைவன் என்பதைத் தெளியாமல் சாமானியர் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு தெய்வத்தை சுதந்திர நிர்வாககனாகக் கருதி மூன்று மூர்த்திகளும் தலைவர்கள் என்று சொல்லுவதைக் கருத்தில் கொண்டு மூவருமே என்ன நின்ற இமையவர்' என்கின்றார். அன்றியும், நான்முகன் சிவன் இவர்களும் எம்பெருமானுடைய திருமேனி என்று தெளியக் கண்ட ஆழ்வார் அவர்களையும் திருவுரு என்ற பெருமை யுடைய சொல்லாலே குறிப்பிடுகின்றார் எனலாம்.

ப. கா.-32