பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, வளர்ப்பு, திருமணம் 5

கலியனைக் கைபிடிக்கச் செய்தனர் அவள் தம் வளர்ப்புப் பெற்றோர்கள்.

ததியாராதனை: கலியன் தன் கையிலகப்பட்ட பொருளையெல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதி லேயே செலவிட்டார். அரசனுக்குச் சேரவேண்டிய திறைப்பொருளும் இதிலேயே கரைந்தது. நாளடைவில் இச் செய்தி அரசனது செவிக்கும் எட்டியது, கொற்றவன் கோபங்கொண்டு இவர்பக்கல் திறை வாங்கி வருவதற் காகத் தன் சேவகரை அனுப்பினான். அவர்கள் வந்து கேட்டதற்கு இவர் காலை, பகல், மாலை, இரவு, நாளை பின்னிட்டு என்பதாகச் சிவ தவணைகள் கூறிக் கால தாமதம் செய்து வந்தார். பின்னர், அச்சேவகர்கள் கடுமையாகத் தொந்தரவு செய்தமையால் நீலன் வெகுண்டு அவர்களை வெருட்டித் துரத்தினார். இதனை அறிந்த அரசன் மிகவும் சீற்றமுற்றுத் தனது தானைத் தலைவரை நோக்கி, "நீ சேனையுடன் சென்று கலியனைப் பிடித்து வருக' என்று பணிக்க, அவன் அங்ங்ணமே பெரும் பெரும் படையொடு வந்து இவரை வளைத்துப் பிடிக்கத் தொடங்கினான். இவர் ஆடல்மா’ என்ற புகழ் பெற்ற பரிமீது இவர்ந்து சேனைகளோடு முன் சென்று எதிர்த்துப் பொருது தானைத் தலைவனைப் புறமுதுகு காட்டி ஒடச் செய்தார். இதனை அறிந்த அரசன் தானே சேனை களுடன் வந்து இவரை வளைத்தான். இவரும் தம் படை வலிமையால் அப்படையைக் கடந்து தமது திறமையைக் காட்டிப் பொருதார். பின்னர் அருள்மாரி என்னும் தமது பெயருக்கு ஏற்ப, கொற்றவனைக் கொல்லாகாது என்று சிறிது காலம் போர் நிறுத்தம் செய்தார். இதுவே சமயமாக அரசன் தந்திரமாய் நன்மொழி பகர்ந்து அருகில் வந்து, நீலா, நின் வீரத்தைக் கண்டு மெச்சினோம் என்று பாராட்டி, விரை வில் திறை செலுத்துக” என்று சொல்லி இவரைத் தன்