பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 507

அம்பரம் அனல்கால் நிலம்சலம்

ஆகி நின்ற அமரர்கோன் (18:8) வான் நாடும் மண் நாடும்

மற்றும் உள்ள பல்உயிரும் தான்ஆய எம்பெருமான் (4.13) குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு நின்றவெம் சுடரும் அல்லா

நிலைகளும் ஆய எந்தை (4.5:7) நீர் அழல் வான்ஆய் நெடுநிலன் கால்ஆய்

நின்றதின் நீர்மை. (10 9:9) தீளம் பெருமான் நீர்எம் பெருமான்

திசையும் இருநிலனும் ஆயனம் பெருமான் ஆகிநின்றால் (4.9:5) என்பனவாகும்.

விளக்கம்: சரீர-சரீரி பாவனை என்ற கருத்தை இவ் விடத்தில் விரிவாக விளக்குவது பொருத்தமாகும். உயிர் உடலில் இருந்து அதனைத் தரிக்கச் செய்கின்றது. உயிரின் றேல் உடல் வீழ்ந்து விடுதல் கண்கூடு. மேலும் உயிர் தான் உடலை இயக்குகின்றது. உயிர் உடலுக்குத் தலை வனாக உள்ளது. அங்ங்னமே இறைவன் எல்லாப் பொருள் களில் இருந்து அவற்றைத் தன் விருப்பம்போல் நடத்தி அவற்றிற்குத் தலைவனாகவும் இருக்கின்றான். ஆயினும், உடலினுள் உயிர் இருப்பதற்கும் எல்லாப் பொருள்களி லும் இறைவன் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. உயிர் அணு அளவினதாய் உடம்பினுள் ஒரிடத்திலிருந்து தன் ஞானத்தால் (தர்மபூத ஞானத்தால்) உடல் முழுவதும் வியாபித்து இவ்வுடம்பைப்பற்றிய நிகழ்ச்சிகளை உணர்த்துகின்றது. இறைவன் அங்ங்ணமின்றி ஒவ் வொரு பொருளுள்ளும் முழுவதும் தன் சொரூபத்தோடு