பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 5 Al

பனைமுலை ஆயர்மாதர் உரலோடு கட்ட,

அதனோடும் ஒடி, அடல்சேர் இணை மருது இற்றுவீழ தடைகற்ற தெற்றல்

வினைப்பற் றறுக்கும், விதியே (1.1.4.9) இது கிருட்டிணாவதாரத்தில் ஆழ்வார் ஆழங்கால் பட்டதைக் காட்டுவது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமன - திரிவிக்கிரமன், பரசுராமன், இராமன், ஹம்சம் அவதாரங்களைக் கூறும் பாசுரங்கள் இப்பதிகத்தில் உள்ளன. திருமங்கையாழ்வார் அவதாரங் களில் ஈடுபட்டதைப் பல்வேறு இடங்களிலும் காணலாம்.

பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு

பார்த்தன்தன் தேர் முன்நின் றானை சிற்றவை பணியால் முடிதுறந் தானை

திருவல்லிக் கேணிகண் டேனே (2.3:1) இதில் அர்ச்சாவதாரத்தில் ஈடுபட்ட நிலையில் கிருஷ்ணா வதாரம், இராமாவாதாரம் இவற்றில் ஈடுபடுகின்றதைக் காண்கின்றோம். பெரும்பாலும் இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் அதிகமாகவும், வாமனம், நரசிம்மம், வராகம் முதலியவை அவற்றுக்கு அடுத்துக் குறைவாகவும் குறிப்பிடப்பெற்றுளன. முன்னவை மக்களிடையே தோன்றி அதிகக் கால அளவு பழ கினமையே இதற்குக் காரணமாகக் கொள்ளலாம். இதன் காரணமாக இறைவனின் மங்கள குணங்களை மக்கள் அநுபவிப்பதற்கு வாய்ப்புகள் மிக்கு இருந்தன. ஆகவே, ஆழ்வார்களும் அவற்றில் அதிகமாக ஈடுபட்டுப் பேசு கின்றனர்.

அந்தர்யர்மித்துவம் : சேதநர்களின் உள்ளேபுக்கிருந்து எல்லாச்செயல்கட்கும் தாம் ஏவுபவனாக இருப்பதோடு அவர்கட்குத் தியான ருசி பிறந்தபோது தியானத்திற்கு உரியனாவதற்காகவும், அவர்களைக் காப்பதற்காகவும், அழகேவடிவெடுத்தாற்போன்ற மங்களகரமான திருமேனி