பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5互6 பரகாலன் பைந்தமிழ்

வணங்கும் சோதியாக' (திருநெடுந் 19) இருப்பவன் அர்ச்சாவதாரி எம்பெருமான், பல இடங்களிலும் எழுந் திருவியிருக்கும் நிலைகளை நினைந்து 'மடுத்கள்' என்று பன்மையாக அருளிச் செய்தார். அவதாரங்களின் குணங் கள் எல்லாம் அர்ச்சையையினிடத்திலே குறைவற்று நிறைந்திருப்பதாலும், அவதாரங்களின் திருவுருவங்களை அர்ச்சை வடிவமாகப் பல இடங்களில் மேற்கொண்டிருப் பதாலும் அதிலே தேங்கின மடுக்கள் போலே’ என்று குறிப்பிட்டார் இந்த ஆசாரியப் பெருமகனார்.

பாகவதர்களின் பெருமை: அடியவர்களின் பெரு மையை எல்லாச் சமயங்களும் புகழ்ந்து பேசுகின்றன; இஃது ஒரு சமயதத்துவமும் ஆகும். ஆன்மா உய்வதற்கு இன்றியமையாது அறியவேண்டிய பொருள்கள் யாவும் பெரிய மந்திரத்திற்குள்ளே அடங்கியுள்ளன என்று முமுட் கப்படி பேசுகின்றது". இவற்றுள்ளும் சாரமாய் அறியும் பொருள், அடியார்க்கு அடிமை” என்பது தேர்ந்த பொருளாகும் என்பர் திருமங்கை மன்னன்.

மற்றும்ஒர் தெய்வம்

உளதென் திருப்பாரோடு உற்றிலேன்; உற்றதும்

உன்னடி யார்க்கடிமை மற்றெல்லாம் பேசி லும்

நின்திரு எட்டெழுத்தும் கற்றுநான் கண்ண

புரத்துறை அம்மானே (8.10:3) திருமந்திரம் பல பொருள்களை நுவலும்; அஃதாவது அஞ்சர்த்தம்'. இஃது அர்த்த பஞ்சகம் எனப்படும். ஈசு வரனின் சொரூபம், ஆன்மாவின் சொரூபம், ஆன்மா

17. முமுட்சு-22. 18. டிெ-23.