பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 5 7

அடையும் பயன், அடைவதற்கு வழியாகவுள்ள உபாய சொரூபம், அப்பயனை அடைவதற்குப் பகையாக உள்ள வற்றின் சொரூபம் ஆகியவற்றை விளக்கமாகத் தெரிந்து கொள்வதே அர்த்த பஞ்சக ஞானம்’ எனப்படும். திரு வாய்மொழி ஆயிரமும் இதனையே விளக்குகின்றது. திருப் பாவையும் இதனையே பேசுவதாகப் பெரியோர் பணிப்பர். வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் ஐந்து பொருள்களையே சொல்லுகின்றன.

பகவத் சேஷத்துவத்திற்கு எல்லைநிலம் பாகவத சேஷத்துவம். இதனைத் திருக்கடல் மல்லைத் திருப்பதிகம் (3.6), திருச்சேறைத் திருப்பதிகம் (2.6) ஆகிய இாண்டி லும் விளக்குவர் ஆழ்வார். இந்த இரண்டிலும் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களை இடைவிடாது சிந்திக்கும் பாகவதர்கள்தாம் ஆழ்வார்களால் நினைக்கப் பட்டவர்கள். உலகில் தமக்குத் தொண்டு புரிவதைக் காட்டிலும் தம் குழந்தைகளுக்கு அன்புடன் தொழில் புரி யுங்கால் பெற்றோர் மிக்க மகிழ்ச்சி அடைவதைக் கண் கூடாகக் காண்கின்றோம். அங்ங்னமே எம்பெருமானும் தம் அடியார்க்குத் தொண்டு புரியும் போதே முழுமையான முக மலர்ச்சியை அடைகின்றான். பகவத் பக்தியின் உறைப்பையே பாகவத பக்தி வெளிப்படுத்தும். எம்பெரு மானுடைய பாதுகைகளிலே ஆதரம் வைத்து அவற்றைக் கண்களில் ஒற்றிக் கொள்வதையும், தலைமேல் அணிந்து கொள்வதையும், அவற்றை அலம்பிய தீர்த்தம் பருகுவதை யும் நாம் செய்கின்றோம். இதனால் நமக்கு எம்பெருமா னிடத்திலுள்ள பக்தி வெளியாகின்றதல்லவா? இங்ங்னமே இவ்விரண்டு திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான்களைப் பணிகின்ற பாகவதர்களே தாம் வழி படுவதற்கு உரியவர்கள் என்கின்றார் ஆழ்வார்.