பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, வளர்ப்பு, திருமணம் 7

பல மரியாதைகளைச் செய்தான். பின்னர் தான் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருளும்படி வேண்டி னான். அடுத்து, பாஞ்சாலிக்குப் புடவை சுரந்தாற் போல மாயவன் அருளார்ந்த பெருகிய இப்பொருளை கருவறையில் வைக்கக்கூடாது' என்று துணிந்து அப் பொருள் முழுவதையும் இவரைப் பட்டினியில் வைத்த பாவம் தீர்வதற்காகப் பலபல பாகவதர்கட்கு அளித்துத் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டான். இவை குருபரம் பரையில் கண்ட செய்திகளாகும்:

வயலாளி மணவாளனை வழிப்பறி செய்தல்: இந்த நிகழ்ச்சியின் பின்னரும் கலியன் த்தியாராதனை யைத் தொடர்ந்து நடத்தி வந்தார். மீண்டும் பொருள் முட்டுப்பாடு ஏற்பட்டது. தாம் நீள்மேல் நடப்பான் முதலிய நால்வரையும் துணைகொண்டு ஆறலைத்தாகிலும் பொரு வீட்டி அப்பொருளைக்கொண்டு ததியாராதனையை விடாது நடத்த வேண்டும் என்று உறுதி கொண்டு அந்த அடாத செயலிலும் இறங்கினார். இவர் களவு செய்வதும் வைணவ அடியார்களை ஆராதிப்பதுமாகிய நோன்பை நோற்று வந்ததால் அதனை நல்வினையாகக் கொண்டு இவர் மீது மிக்க கருணை கொண்டான் வயலாளி மணவாளன். இவரை அங்கீகரிக்க வேண்டும் என்று திருவுள்ளம்பற்றி இவர் தன்னையே வழிப்பறிக்குமாறு தான் ஒர் அந்தணனாகக் கோலம் கொண்டு பல அணிகளையும் தரிந்து மணவாளக் கோலமாய் மனைவி யுடனே இவர் இருக்கும் வழியே எழுந்தருளி வந்து கொண்டிருந்தான். இந்நிலையில் திருமணங் கொல்லை யில் திருவரசமரத்தின் கீழ்ப் பதுங்கியிருந்த குமுத வல்லி மணவாளர் கண்டுகளித்த நிலையில் ஆயுத

5. திருவாலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்

கும் எம் பெருமான்.