பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.522 பரகாலன் பைந்தமிழ்

வேங்கடத்து அரியை பரிசீறியை

வெண்ணெய் உண்டு உரலிடை ஆப்புண்ட

திங்கரும்பினை, தேனைநன் பாலினை

அன்றி என்மனம் சிந்தைசெய் யாதே (7.3:5)

என்று எம்பெருமானையே சித்தோபாயமாகக் கொண்டி ருப்பதைக் காணலாம். நாயக நாயகி பாவனையில் வரும் பாசுரங்களில் மகளிர் பாசுரங்கள் இந்த நெறியைக்

குறிப்பிடுகின்றன.

சாத்தியோபாயம் என்பது, நம்மால் மேற்கொள்ளப் பெறும் உபாயமாகும். இது பக்தி என்றும், பிரயத்தி என்றும் சாத்திரங்களில் இருவகையாகப் பேசப்பெறும். சேதநன் இவற்றுள் ஒன்றை அநுட்டித்த பின்பே எம் பெருமான் அவனை ஏற்றுக்கொண்டு பலன் தருகின்றான். வினையிலே கிடந்துழலும் சேதநனைப் பகவான் தேர்ந் தெடுப்பதற்குக் காரணம், அவன் மேற்கொள்ளும் நெறியேயாகும். இல்லாவிடில் எல்லாச் சீவர்களுக்கு முத்தி சித்திக்க நேரிடும். பக்தி, பிரபத்தி ஆகிய நெறி களில் ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகுவதே சேதநனின் முத்தி நெறியாகும்.

பக்திநெறி பக்தி நெறியை மேற்கொள்பவர் பக்தர் எனப்படுவர். பத்தர் எனினும் பித்தர் எனினும் ஒன்றே யாகும். உலகில் நோயால் கொள்ளும் பித்தும், மருளால் கொள்ளும் பித்தும் துன்பம் தருவன. அருளால் கொள் ளும் பித்து அளவிலா இன்பம் தருவது. 'பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்” (7. 39: 10) என்பர் சைவசமய குரவருள் ஒருவராகிய சுந்தர மூர்த்தி அடிகள். குலசேகரப் பெருமாளும் "பேதை மணவாளன்தன் பித்தனே' (பெரு. திரு. 3: 6), எம்பி ரானுக்கு எழுமையும் பித்தனே' (3: 6), பித்தனாய்