பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 523

ஒழிந்தேன்' (3, 7) "பேயனாய் ஒழிந்தேன் எம்பிரா னுக்கே’’ (3: 8) என்ற அவர்தம் வாக்குகளால் தம்மைப் பித்தன்' என்றும் பேயன் என்றும் கூறிக்கொள்வ தனால் இதனை மேலும் தெளிவு பெறலாம். இந்தப் பக்தி நிலையை மெய்விளக்க அறிஞர்கள் பக்தியோகம் என்று வழங்கி அதை எட்டு அங்கங்களாக முறைப் படுத்தி வகுத்துக் காட்டுவர்.

எட்டு அங்கங்களாவன : (1) இயமம் என்பது, அகிம்சை சத்தியம், திருடாமை, காமத்தை அடக்குதல், பொருளைச் சேர்க்க முற்படாமை ஆகிய நிலை; (2) கியமம் என்பது, தூய்மை, உள்ளத்தைக் கொண்டு மன நிறைவு பெறுதல், விரதம், தவம் முதலியன செய்தல், வேதாந்த பரிசயம் செய்தல், எல்லாச் செயல்களையும் இறைவனிடம் சமர்ப்பித்தல்; (3) ஆசனம் என்பது, பதுமாசனம் முதலிய ஆசனங்கள், (4) பிராணாயாமம் என்பது, மூச்சைக் கட்டுப்படுத்தி ஆளுதல்; (5) பிரத்தியா காரம் என்பது, புலன்களை உலகப் பொருள்களினின்றும் திருப்புதல்; (6) தாரணை என்பது, பகவானுடைய திருமேனியை மனத்திற் கொள்ளுதல், (7) தியானம் என்பது, இடைவிடாது இறைவனை நினைத்தல்: (8) சமாதி என்பது, இறைவனை நேரிற்கண்டாற் போன்ற நிலையினை அடைதல்.” இந்த எட்டு அங்கங்களை யுடைய பக்திநெறியொழுகுவார்க்குப் பிராட்டிக்கு அமுத மாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாக வீடு பேற்றினை அளிப்பான்.

இந்த நெறி மிகக் கடினமானது. இக்காலத்தில் பக்கி நெறியை அநுட்டிப்பதற்கு அதிகாரிகள் (Qualified

21. தே. பி. 254