பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 529

இருவரையும் திருத்துவது

உபதேசத்தாலே".

என்று பகர்கின்றது. இதனை ஈண்டு விளக்குவது மிகவும் இன்றியமையாததாகும்.

எம்பெருமாட்டி இறைவனை நோக்கி இவ்வாறு பேசுவாள்: "இவனுடைய குற்றங்களைக் கணக்கிட்டு நீர் இப்படித் தள்ளிக் கதவு அடைத்தால், இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ? உமக்கும் இவனுக்கும் உண் டான உறவு முறையைப் பார்த்தால் உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது' (திருப். 28) என்கின்றபடி குடநீர் வழிந்தாலும் போகாதது ஒன்றன்றோ? உடைமை யாக இருக்கின்ற இவனை அடைதல் சுவாமியான" உம் மூடைய பேறாக அன்றோ இருப்பது? எதிர் சூழல் புக் குத் திரிகின்ற உமக்கு நான் சொல்ல வேண்டுமா? காப் பாற்ற வேண்டும் என்ற விருப்பத்தோடு வந்த இவனைக் காப்பாற்றாதபோது எல்லாப் பொருள்களையும் காப் பவர்’ என்ற உம்முடைய தன்மை குலைந்து போகாதோ? அநாதி காலமாக நம்முடைய ஆணையை மீறித் தன் இச்சைப்படியொழுகிப் போந்த இவனைக் குற்றங் களுக்கேற்பத் தண்டிக்காமல் நாம் ஏற்றுக் கொள்ளின் நாம் ஏற்படுத்திய சாத்திரங்களின் மரியாதை குலை யாதோ என்றல்லவா நும் திருவுள்ளத்தில் ஒடுகின்றது? அங்ங்னமாயின் நும்மை நாடி வந்த இவனைக் காக்காமல் இவனுடைய குற்றங்களை மட்டிலும் நோக்கித் தண்டித் தால் உம்முடைய அருட்குணம் நிலைப்பது எவ்வாறு?

25. பூரீவச. பூஷ-12

26. சுவாமி-சொம்மையுடையவன் சுவாமி; சொம்

சொத்துடைமை.

27. திருவாய் 2.7:6.

ւյ. 5rr.-34