பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பரகாலன் பைந்தமிழ்

பாணியாய்த் தன் தோழர் நால்வருடனும் பரிவாரங் களுடனும் வந்து தம்பதிகளை வளைத்துக் கொண்டார். தம்பதிகளின் அணிகளையெல்லாம் கழற்றச் செய்து அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டினார். திருமணமான வராதலால் கால் விரலில் பொன்னாலான அறுகாலி மோதிரம் (மெட்டி என்று சொல்வர்) காணப்பட்டது. அதையும் கழற்றித் தருமாறு கேட்டார்; கழற்ற முடிய வில்லை.

கலியன் என்ன செய்தார் தெரியுமா? உடனே மாப் பிள்ளையின் காலைப்பிடித்துக் கொண்டு தம்பல்லால் கடித்து வாங்கினார். கட்டிவைத்த மூட்டையைத் துரக்க முயலும்போது தூக்க முடியவில்லை; பேர்க்கவும் முடிய வில்லை. உடனே மறையவரை நோக்கி, அந்தணரே, நீர் ஏதோ மந்திரம் செய்தீர்' என்று சொல்லி நெருக்க, அந்த மந்திரத்தை உமக்கும் சொல்லுகின்றேன்’ என்று கழுத்தை அணைத்தார். கலியனும் சம்மதித்து நீர் சொல்லாவிடில் இந்த வாளுக்கு இரையாவீர்” என்று தம் கையிலுள்ள வாளைக் காட்டி அதட்டினார். உடனே மறையவரும் மூன்று பதமாய், எட்டு எழுத்துகளாய் இலங்கும் சகல வேதசாரமான திருமந்திரத்தைக் கலியனின் வலத்திருச் செவியில் செவிக்கின்பமாய் முன்பு நரநாராயணராய்த் தமக்குத் தாமே சொல்லிக்கொண்ட குறைதீர உபதேசித் தார். அன்றியும், தாமும் பெரிய திருவடிமேல் காள மேகம் போன்ற திருமேனியுடன் (திவ்விய மங்கள விக்கிர கத்துடன்) பெரிய பிராட்டியார் பூமிப் பிராட்டியார் சமேதரராகச் சேவை சாதித்தார். இவ்வாறு வழிப்பறி

இதனால் பிரபத்தி (சரணாகதி) ஆகி விட்டது. மூன்று பதம் = ஒம்--நமோ-நாராயணாய.

8. எட்டு எழுத்தாய்=ஒம் (1)- நமோ (1-1)--

நாராயணாய (1-1-1-1-1) = 8

7