பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 பரகாலன் பைந்தமிழ்

இவனைக் காப்பாற்றிய பொழுதன்றோ உம்முடைய அருட்குணம் ஒளி பெறும்: 'இவனைத் தண்டிக்கவில்லை. யேல் சாத்திரம் நிலையாது; இவனைக் காக்கவில்லையேல் அருள் முதலிய குணங்கள் ஒளி பெறா என்று அஞ்ச வேண்டா; உம்மைச் சிறிதும் நோக்கிப் பாராது தன்னிச் சையில் செல்பவனிடம் சாத்திரத்தைப் பயன்படுத்துவீர்; 'உம்மை அன்புடன் தாடி வந்த இவனைப் பாவங்களினின் றும் நீக்கிக் காப்பாற்றுவீர். இப்படிச் செய்தால் சாத்திர மும் பழுது படாதி: உம்முடைய அருட்குணமும் உயிர் பெற்றுத் துலங்கும்.' இவ்வாறு எம்பெருமானுக்கு ஏற்ற பற்பல இனிய சொற்களைப் பகர்ந்து அவன் சினத்தை மாற்றி அவனுக்குச் சேதநனிடம் அருள் பிறக்குமாறு: செய்வர். இவ்வினிய சொற்களாலும் ஈசுவரனது நெஞ். சம் இளகவில்லையேல் பிராட்டியார் தம் அழகைக் காட்டி அவனைத் தம் வசப்படுத்திச் சேத நனை அங்கீகரிக்குமாறு: செய்வர்.

, ,பெருமாட்டி சேதநனை நோக்கி இவ்வாறு பேசு வர்; உன் குற்றங்களின் மிகுதியைப் பார்த்தால், உனக்கு. ஒரிடத்திலும் காலூன்ற இடம் இல்லை. ஈசுவரன் யாதொன்றாலும் தடைசெய்யப்படாத சுதந்திரத்தை யுடையவனாதலால், குற்றங்களைப் பத்துப் பத்தாகக் இட்டு அறுத்து அறுத்து நுகர்விப்பான். இதற்கு தீ வேண்டுமாகில் அவன் திருவடிகளில் தலை சாய்க் لسناقي கையைத் தவிர வேறு வழி இல்லை. குற்றங்கள் நிறைந்த உன்னை அவன் ஏற்றுக்கொள்வானோ? என்ற ஐயம் ஆன்டா, ருசி பிறந்த அளவில் உன்னுடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுப்பான். இனியனவாகவும் கொள் தற்கு ஈடானவுமான குணங்களால் நிறைந்தவன் என்ற புகழ் பெ ற்றவன். ஆகவே, நீ உய்ய வேண்டுமானால்