பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 53量”

அவனை அடைந்திடுக' என்று நல்லுபதேசம் செய்வார். இதனைப் பிள்ளை உலக ஆசிரியர்,

"உபதேசத்தாலே மீளாதபோது சேத

நனை அருளாலே திருத்தும்; ஈசு வரனை அழகாலே திருத்தும்'

என்று அழகாகக் காட்டுவர். பெரிய மிடுக்கனும் முரட னுமான அநுமனையே தமது உபதேசத்தாலே பொறுக்கு மாறு செய்தவர்.” தம் அழகில் சிக்குண்டு தம்மிடம் அளவு கடந்த அன்புடையவனும், தம் சொல்லின்படி நடப்பவனுமான பெருமானைப் பொறுக்குமாறு செய் வார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பிராட்டியாரின் புருஷகாரத்தினால் ஈசுவரனுடைய சுதந்திரத் தன்மை மாய்கின்றது. புருஷகாரத்திற்கு முன் னர்த் தலையெடுக்கப்பெறாமல் மறைந்திருத்தனவும் புருஷகாரத்திற்குப் பின்னர் ஒங்கி நிற்பனவுமான குணங் கள் வாத்சல்யம், சுவாமித்துவம், செளலப்பியம், செளசீல் யம், ஞானம், சக்தி என்பவை என்று தெரிவிப்பர் பிள்ளை உலக ஆசிரியர். சேதநன் எம்பெருமானைப்பற்றும் போது உதவி புரிவது செளலப்பியம் என்னும் அருள் குணம். செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சா

28. பூரீநிவச. பூஷ 14

29. அசோகவனத்தில் அநுமன் பிராட்டியை இம்

சித்த அரக்கிமாரைத் தம்மைத் துன்புறுத்தியது அரசனானைப் படியேயன்றித் தாமே பிழை செய்திலர் என்று கூறி மாருதியைச் சமாதானப் படுத்தினர் என்பது இராமாயண நிகழ்ச்சி.

30. முமுட்சு-137 இவற்றின் விளக்கத்தை உரையில்

காண்க.