பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

まう32 பரகாலன் பைந்தமிழ்

வதாரம்' என்று கூறும் முமுட்கப்படி காரணம், இஃது எப்போதும் நம்மருகில் நிலைபெற்றுக் கண்ணால் கண்டு களிப்பதற்கு இடந்தருகின்றது.

கருணையே வடிவு கொண்டதைப் போன்ற ஈசுவரத் தன்மை கீழடங்கி, அவனுடைய அருட்டன்மை மேல் கிளம்பச் செய்பவருமான பிராட்டியார் உடன் இருந்த தனால் காகாசுரன பிழைத்தான். இவர் பிரிந்ததனால் இராவணன் இராமபிரானின் அம்பிற்கு இலக்காகி உயிர் இழந்தான். இன்னும் 'உந்து மதகளிற்றன்: (திருப். 18) என்ற திருப்பாவையின் (ஆயச் சிறுமிகள் தங்கட்குப் புருஷகாரமாக இருப்பவளான நப்பின்னையை எழுப்பும் பாசுரம்) உரையிலுள்ள 'பிராட்டியை விரும் பாமல் பெருமாளைப் பற்றின சூர்ப்பனகை கேட்டினை அடைந்தாள்; பெருமாளையொழியப் பிராட்டியைப் பற்றின இராவணனும் கேட்டினை அடைந்தான்; இரு வரையும் பற்றின வீடணன் உய்ர்ந்தான்' என்ற குறிப்பு கண்டுச் சிந்திக்கத் தக்கது. இன்னும் இராமனை ஏசிப் பேசினபோது,

ஆவியைச் சனகன் பெற்ற

அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத்

திகைத்தனை போலும் செய்கை: என்று குறிப்பிடுகின்றான். மனைவியைப் பிரிந்ததனால் உன் மதி கெட்டுப் போய் இங்ங்ணம் செய்தாயோ?”

31. முழுட்சு-139. இந்தப் பெருங்குனம் இருட்டறை யில் விளக்குப்போலே பிரகாசிப்பது இங்கே. (அர்ச்சையில்) என்று பேசும் அரீவச. பூஷ 40

32. கம்ப. கிட்சிந், வாலிவதை-38