பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 53。

என்ற தொனி இதில் காணப்படினும் 'புருஷகார பூதை யான பிராட்டி அருகில் இல்லாததனால்தான் எனக்கு இக்கேடு நேர்ந்ததோ?" என்ற ஆழ்பொருளும் இதில் அடங்கிக் கிடப்பதைக் காணமுடிகின்றது. இங்ங்னமாகப் பிரபத்திக்குப் பிராட்டியின் புருஷகாரம் இன்றியதையாத தாகின்றது. ஆகவே, ஒருவர் பிரபத்தி செய்யும்போது எம்பெருமான், எம்பெருமாட்டி ஆகிய இருவர் சேர்த்தி யில்தான் இரக்க வேண்டும் என்ற நியதியைக் காண முடிகின்றது. இதற்கு எம்பெருமானார் (இராமாநுசர்) நம்மனோர் புரிந்த கொடிய குற்றங்களைப் பொறுக்கு மாறு சீரங்கநாச்சியாரும் அழகிய மணவாளப் பெரு மாளும் ஒரே சேர்த்தியில் எழுத்தருளியிருக்கும் காலத்தை நோக்கிக் கொண்டிருந்து பங்குனி உத்திரத்தில் பிரளத்திப் பது தக்க சான்றாகும்.

3. புருஷார்த்தம்

புருஷன் - ஆன்மா: அர்த்தம் - பொருள்' ஆன்மா அடைய வேண்டிய பொருள். இது வீடு பேறு; மோட்சம், வைணவதத்துவத்தின் நவநீதம் போன்றிருப்பது இது; மோட்சத்திலும் ஆன்மாவின் குறிக்கோள் கைங்கரியம்; அடிமைத் தொழில். அதாவது வைகுந்தத்தில் பரமபத. நாதனுக்கு அடிமைத் தொழில் புரிவதே வைணவர்கள் விரும்பும் வீடுபேற்றின் பலனாகும். நம்மாழ்வார் இதனையே விரும்புகின்றார்.

ஒழிவில் காலம் எல்லாம்

உடனாய் மன்னி

வழு இலா அடிமை

செய்ய வேண்டும் (திருவாய் 3.3:1)

என்பது ஏழுமலையப்பன்மீதுள்ள பாசுரம். இதில் ஆழ்வார் அவனுக்குக் கைங்கரியம் புரிய விரும்புவதைக்