பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53盤 பரகாலன் பைந்தமிழ்

ཕ་ཡ། མན་ན་ཡམས་ཡམས་ལས་༤

காணலாம். ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் இத் திருவாய் மொழியைப் பாடப்புக் கால் ஒழிவில் கால மெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம் என்று இங்ங்ண்னே நெடும்போதெல்லாம் பாடி, மேல்போக மாட்டாமல் அவ்வளவிலே தலைக்கட்டிப் போவாராம்' என்பது ஈட்டில் காணபெறும் செய்தியாகும்.

திருமங்கையாழ்வாரும் திருவேங்கடம்பற்றிய திருப் பதிகம் ஒன்றில் (1.9), நாயேன் வந்தடைந்தேன்; நல்கி, ஆள் என்னைக் கொண்டருளே’ (1), அடியேனை ஆட் கொண்டருளே’ (2) என்று பாசுரங்தோறும் தன்னை அடிமை கொண்டருளுமாறு வேண்டுகின்றார். மற்றொரு திருப்பதிகத்தில் (2.1) தன்நெஞ்சைநோக்கித் திருவேங்கட முடையானுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே’ என்று பாசுரந்தோறும் சொல்லிச் சொல்லி உகக்கின்றார்:

நெஞ்சையும் புகழ்கின்றார்.

திருமந்திரத்தால் சேஷத்துவ ஞானம் ஏற்படுகின்றது என்பதை நாம் அறிவோம். பரமபுருடனுக்குச் சிறப்பை உண்டாக்கும் பொருளாய் இருத்தலே சேஷத்துவமாகும். இச் சிறப்பு சேதநன் அவனுக்கு அடிமைத் தொழில் செய்யும்போதுதான் ஏற்படும். அங்ங்னம் செய்யாதபோது ஏற்படுதல் இல்லை. இம்முறையில் இதனை நுணுகி நோக்கின், சேஷத்துவ ஞானம் அடிமைத் தொழிலைப் பற்றிய அறிவாய்த் தேறி நிற்கும். வைணவ சமயத்தில் இச்சையை ஞான விசேடமாகவே கொள்ளுகின்றமை யினால் அவ்வறிவு பலத்தில் விருப்பமுடையதாகவே (பலேச்சையாய்) முடியும். ஒருவன் ஒரு பலத்தை விரும் பினால், அவன் அதற்கேற்ற வழியில் நுழைதல் உலக அநுபவமாகும். இங்ங்னமே திருமந்திரத்தால் மேற்கூறிய பலேச்சை ஏற்படுகின்றமையினால் அப்பயனை அடைய பகவானுடைய சரண க ம லங்க ைள யே இவன் சாதனமாய்ப் பற்றவேண்டியவனாகின்றான்.