பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 535

சேதநன் எம்பெருமானுக்குக் செய்ய வேண்டிய அடிமைத் தொழில் வாசிகம், காயிகம் என இருவகைப் படும். அவற்றுள் வாசிகமாவது, பரமபுருடனை அநுப விக்கும்போது வாபினால் சாம கானத்தைச் செய்தல், திருமந்திரத்தைச் சொல்லுதல், ஆழ்வார் பாசுரங்களை ஒதுதல் முதலியவையாகும். காயிகமாவது, இளைய பெருமாளைப்போல் உடனிருந்து உடலினால் அடிமைத் தொழில் புரிதலாகும். திருக்கோயிலில் திருவலகிடுதல், மூர்த்திக்கு அபிடேகம் செய்தலும், அலங்கரித்தலும்: இல்லத்திலும் எம்பெருமானுக்கு அவைபோன்ற கைங் கரியத்தைச் செய்தலும் ஆகும். இவை மட்டுமேயன்றி பரமபுருடனுக்கு எல்லாச் செல்வங்களும் மேன்மேல் உண்டாக வேண்டும் என்று மனத்தால் பாரிக்கின்ற பாரிப்பையும் மானசமான கைங்கரியம் என்று பெரியோர் பணிப்பர்.

சேஷத்துவமே ஆன்மாவிற்குச் சொருபமாதலினாலும் தொண்டு செய்யாதபோது அச்சேஷத்துவம் கைகூடாதாத லினாலும், தொண்டு ஆன்மாவிற்கு ஒரு காலத்திலன்றி என்றும் உள்ளது. கைங்கரியந்தான் நித்தியம்' என்று கூறுகின்றது முழுட்சுப்படி. அகவிதழ் இன்றேல் மலர் இல்லை. அங்ங்னமே சேஷத்துவம் இல்லாதபோது ஆன்மா இல்லை. இந்த சேஷத்துவம் தொண்டு செய்யாதபோது சித்தியாது. ஆதலினாற்றான் ஆசாரியர்கள் உனக்கு என்றும் தொண்டனாய் இருந்து உன்னை மகிழ்விக் கின்றேன்' என்றும்" உனக்கு என்றும் கைங்கரியம் புரிபவனாகக் கடவேன்' என்றும் அருளிச் செய்துள்ளதை நோக்கி அறிதல் வேண்டும்.

இந்தக் கைங்கரியத்தை நித்தியமாகப் பிரார்த்தித்தே பெறுதல் வேண்டும் என்று கூறும் முழுட்சுப்படி"

33. முமுட்சு 175 34. டிெ-176.