பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 பரகாலன் பைந்தமிழ்

அடிமைத் தொழில்களை ஏற்றுக்கொள்ளுகின்ற ஈசுவரன் யாவரிலும் மேலானவனாதலினாலும், செய்பவனான சேதநன் அத்தியந்த பாரதந்திரியனாதலினாலும்", வேண்டிப் பெறாதபோது கைங்கரியம் கைகூடுதல் அருமை ஆதலினாலும் சேதநன் இதனை இடையீடின்றி வேண்டியே பெறுதல் வேண்டும். வேண்டுதல் என்பது, 'அடிமையாகிய என்னைத் தலைவனாகிய தேவரீர், உம் முடைய உவப்பிற்கு உறுப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அடியேன் உளனாமாறு அருள்புரிய வேண்டும்' என்ப தாகும்.

பிரார்த்தித்துதான் பெறுதல் வேண்டும் என்பதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். ஒரு குழந்தை பிணியினால் தாக்குண்டு உணவில் விருப்பற்றுக் கிடக் கின்றது. பிணி நீங்கியவுடன் இக் குழந்தை தானாக அன்னையிடம் வந்து அம்மா எனக்கு அம்மம்!" என்று கேட்குங்கால் அன்னை அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றாள். இங்ங்ணமே சேதநனும் அநாதிகாலமாய் ஐசுவரியம் முதலியவற்றில் உண்டான விருப்பமாகின்ற நோயினால் எம்பெருமானை மறந்து ஈசுவர கைங்கரியத்தில் விருப் பற்றுக் கிடக்கின்றான். எப்படியோ இக் கைங்காரியத்தில் ருசி" பிறந்து, தானே ஈசுவரனிடம் போந்து,

எற்றைக்கும். ஏழேழ்

பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம்

உனக்கேநாம் ஆட்செய்வோம்"

35. அத்தியந்த பாரதந்திரியம்-விசேடமாய்ப் பகவா

னுக்கு வசப்பட்டுருத்தல். 36. ருசி-பாவச் செயல்களையோ புண்ணியச்

செயல்களையோ அறிந்தே செய்தற்குக் காரண மாயுள்ள சுவை.

37. திருப், 29