பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, வளர்ப்பு, திருமணம் 9*

செய்யப்பட்டவர் ஆண்டாளை மணம் செய்து வந்த திரு. வரங்கப் பெருமானே என்று ஆழ்வார்களைப் பற்றிக் கூறும் திவ்விய சூரிசரிதம் குறிப்பிடும்.

இங்ங்னம் யாதொரு காரணமும் பற்றாது கிடைத்த திருமந்திரத்தைப் பெற்றதனாலும், அந்தத் தெய்வத் திரு. மேனியைச் சேவித்ததனாலும் முன்பு காலாழியைக் கழற். தறின்போது பகவானுடைய திருவடிகளில் வாய் வைத்ததனாலும் கலியனின் அஞ்ஞான இருள் நீங்கியது: தத்துவஞானச் சுடர் பொங்கி எழுந்தது. எம்பெரு. மானுடைய சொரூப, ரூப குண, விபூதி சேஷ்டி தங்களையும் அருள்மாரி என்னும்படியான பெரிய பிராட்டியாரின் அருளினாலே கண்டு அநுபவித்தார்; தானும் திருமங்கையாழ்வாராகி விடுகின்றார். இந்த அநுபவத்தின் கனத்தால்ே தம்மிடம் குமுறியெழுந்த மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்கை வெளியிடுவதற்கேற்ற ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தார கவி என்னும் நால்வகைக் கவிகளையும் பாடவல்ல புலமையுடைய வரானார். இந்தப் புலமை ஆற்றலின் விளைவாக,

வாடினேன்; வாடி, வருந்தினேன் மனத்தால்;

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன்; கூடி இளையவர் தம்மொடு

அவர் தரும் கலவியே கருதி

ஒடினேன்; ஒடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் திரிந்து

நாடினேன்; நாடி, நான்கண்டு கொண்டேன்

நாராயணாஎன்னும் நாமம்" (பெருந்துயர் - அளவற்ற துக்கங்கள்; இடும்பைதுன்பம்; இளையவர்-பெண்கள்; உணர்வெனும் பெரும்பதம்-ஞானம்)

9. பெரி-திரு. 1. 1 : 1.