பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, வளர்ப்பு, திருமணம் 1 :

ஏற்படுகின்றது. பக்தி வெள்ளம் கரை புரண்டோடு கின்றது. பாசுரங்கள் பெருக்கெடுக்கின்றன. திருமத்திரப் பொருளின் எல்லை நிலமான திருத்தலங்களில் புக்கு அநுப விக்க இழிகின்றார். எம்பெருமான் சர்வசுவாமி” என்பதும் சர்வ சுலபன் என்பதும் திருமந்திரத்தின் தேர்ந்த பொருளாகும். ஆடியவர்கள் இந்த உடம்புடன் அடிமை செய்து மகிழும் படிக்கும் பாங்காக எம்பெரு விமான் பல இடங்களிலும் கோயில் கொண்டு தன்னுடைய சுவாமித்துவத்தையும் செளலப்பியத்தையும் விளங்கக் காட்டிக்கொண்டு நிற்கின்றான். ஆகவே, திவ்விய தேசங்கள் - திருத்தலங்கள் - திருமந்திரப் பொருளுக்கு எல்லை நிலமாக அமைகின்றன. இத்தகைய திவ்விய தேசங்களை மற்றுமுள்ள ஆழ்வார்கள் அதுபவித்தார்க ளெனினும் திவ்வியதேச அதுபவமே திருத்தலப் பயண மாகக் கொண்டவர் இந்த ஆழ்வார் ஒருவரேயாவர். 86 திருத்தலங்களைச் சேவித்த பெருமை இவருக்கு உண்டு.

வதரியை நோக்கிச் சென்ற இந்த ஆழ்வார் இமய மலையிலுள்ள திருப்பிரிதி, வதரி, வதரி காச்சிரமம், சாளக் கிராமம், ஆகியவற்றை அநுபவித்துவிட்டு, நைமிசாரணி யம், வட மதுரை, அயோத்தி, பிருந்தாவனம், ஆயர்பாடி: வண்துவராபதி, சிங்கவே.ழ் குன்றம் ஆகியவற்றை மங் களாசாசனம் செய்கின்றார். இறுதியாக ஈரத்தமிழ் நடை யதடுவதற்கு எல்லை நிலமான திருவேங்கடத்தைச் சேவிக் கின்றார். திருப்பாற்கடலையும் பரமபதத்தையும் மான சீகமாகக் கண்டு அநுபவித்து மங்களாசாசனம் செய்து வடநாட்டுத் திருத்தலப் பயணத்தைத் தலைக்கட்டுகின் றார்.

திருவேங்கடத்திலிருந்து தொண்டை நாட்டுத் திருப்ப திகளை அநுபவிக்கத் திருவுள்ளம் கொண்டு திரு எவ்வு ளுர் (திருவள்ளுர்) திருக்கடிகை (சோழசிங்கபுரம்), திரு