பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருமந்திரத்தின் வரலாறு

சேதநர்கள் உய்வதற்குச் சாதனமான இரகசியங்கள் மூன்று. அவை: திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்பவை. இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை யில் பெருமை பெற்று விளங்கும். திருமந்திரம் எல்லா மந்திரங்களிலும் சிறந்து விளங்குவது; எல்லா வேதங் களின் சாரமானது: தீங்குகள் அனைத்தையும் போக்க வல்லது; எல்லாப் பலன்களையும் நல்க வல்லது; எல்லா உபாயங்களையும் தலைக்கட்டி வைக்க வல்ல ஒரு சாதன மாக இருப்பது. சேதகம், அசேதகம், ஈசுவரன் ஆகிய தத்துவங்களை வெளியிட வல்லது; வேறு மந்திரங்களின் உதவியின்றி எல்லாப் பலன்களையும் அளிக்க வல்லது; எல்லா மூர்த்திகளுக்கும் பொதுவானது. மாமுனிவர் தளும் ஆழ்வார்களும் இந்த மந்திரத்தையே மிக விரும்பி இதன் பெருமையை அளவிலாது புகழ்ந்து பேசியுள்ளனர்.

எம்பெருமானிடம் கலியனால் ஆயுதப்பிரசவம் போல் வலிந்து பெறப்பட்டது. இம்மந்திரம். ஆயுதப் பிரசவத்தில் வெளியான குழந்தையை மருத்துவரும் பிறரும் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டியவர்களாகின் குனர் இங்கு ஆயுதத்தைக் காட்டிப் பெறப்பட்ட மந்திரம் அனைவரையும் காப்பாற்ற வல்லது. இங்ங்னம் பெருமை பெற்று விளங்கும் திருமந்திரம் எட்டு எழுத்து கள் கொண்டதாகும். உபநிடதம் இந்த மந்திரத்தின்