பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பரகாலன் பைந்தமிழ்

அறிந்து கொள்ளவும் வேண்டிய அறிவினை நல்க வழி வகுக்க எண்ணுகின்றான். இந்த அறிவைப் பெற்றால் (பகவானாகிய) ஏமப் புணையைக் கொண்டு தங்கள் பிறவி யாகிய பெருங்கடலைக் கடந்து வீடுபேறு என்னும் மறு கரையை அடைய முடியும் என்று திருவுள்ளம் கொள்ளு கின்றான். தானே சீடனாசவும் ஆசாரியனாகவும் வடிவம் கொண்டு பதரிகாச்சிரமத்தில் அனாதியானதும், அர்த்த பஞ்சகத்தைச் சுருக்கமாகத் தெரிவிப்பதுமான திருமந்தி ரத்தை, அஃதாவது ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தைவெளியிட்டருளினான். இதனை முமுட்சுப்படி,

'சம்சாரிகள் தங்களையும் ஈசுவரனையும் மறந்து, ஈசுவர கைங்கரியத்தையும் இழந்து, இழந்தோம் என்ற இழவு மின்றிக்கே, சம்சார மாகிய பெருங்கடலிலே, விழுந்து நோவுபட, ஈசுவரன் தன் கிருபையாலே இவர்கள் தன்னை யறிந்து கரைமரஞ்சேரும்படி, தானே சிஷ்யனு மாய் ஆசாரியனுமாய் நின்று, திருமந்திரத்தை வெளியிட்டருளினான்'

என்று பேசும்.

குருவினுடைய திருப்பெயர் நாராயணன். சீடனுடைய திருப்பெயர் கரன். இவர்தம் பிறப்பைப்பற்றியும் அறிந்து கொள்வது இன்றியமையாதது. சத்தியயுகத்தில் பதரி காச்சிரமத்தில் தர்மதேவனுக்கும் தட்சப் பிரஜாபதியின் மகளாகிய மூர்த்திதேவிக்கும் நரன், நாராயணன் என்று

9. இமயமலையிலிள்ள ஒரு திருப்பதி. 10. முமுட்சு-5