பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரத்தின் வரலாறு 19

இருவர் பிறந்தனர். இவர்கள் இருவரும் திருமாலின் அவதாரங்கள். இவர்தம் குழந்தைப் பருவம் நைமிசாரணி யத்தில் கழிந்தது. தவவாழ்க்கை கந்தமாதன பருவதத்தில் தொடங்கியது. பின்னர் தேவர்கள், முனிவர்கள், மக்கள் இவர்கட்குக் குரு-சீட முறையை நன்கு விளங்கும் பொருட்டுப் பதரிகாச்சிரமத்திற்கு வருகின்றனர். இங்குத் தான் நாராயணன் நானுக்குத் திருமந்திரத்தை உபதேசித் தருளினான். இவர்கள் துவாபர யுகத்தில் கண்ணனாகவும் பார்த்தனாகவும் பிறக்கின்றனர். பகவத்கீதை என்னும் பக்திக் கிரந்தம் பிறப்பதற்குச் காரணமாகவும் அமைகின் றனர். இவர்களைப் பற்றி இந்த ஆழ்வார்,

இந்திரன் சிறுவன்

தேர் முன்நின் றானை 18 என்றும்,

பார் ஏறு பெரும்பாரம் தீரப் பண்டு

பாரதத்துத் தூது இயக்கிப் பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை

செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்

14 هp و r هتيم என்றும் குறிப்பிட்டு மகிழ்வர்.

11. இவர்களே துரவாபரயுகத்தின் இறுதியில் கிருட் டிணனாகவுடி அருசசுனனாகவும் அவதரித்தன்ர் என்ற தோட்பாடு ஒன்றும் உண்டு. "பர் : மாவுக்கும் சீவான்ம்ாவுக்கும் இடையிலுள்ள தொடர்பை இக்கோட்பாடு விளக்குகின்றது.

12. அத்தத்திருப்பதி கிழக்கிந்திய இருப்பூர்தி வழியில் புலமு-சீதாப்பூர் கிளைபான்தியில் உள்ளது; நிலையத்திலிருந்து ஒன்றரை கி மீ. தொலைவிலு ள எது .

13. பெரி. திரு. 2. 3 : 6 14. டிெ. 2. 10 : 8