பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரத்தின் வரலாறு 25。

துஞ்சும்போது அழைமின், துயர்வரில் நினைமின்;

துயர் இலீர் சொல்லினும் நன்றாம்;

நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு

நாராய னாவென்னும் நாமம் (10)

என் அறிவுறுத்துகின்றார்.

திருநறையூர் திருமொழி (6.10): இத் திருமொழியின் திருப்பாசுரங்கள் (திருநாமப் பாசுரம் தவிர) ஒன்பதும் :நமோ நாரணமே என்ற மகுடத்தால் முடிவன. நறை யூர் நம்பியின் திருமுன்னர்தான் இந்த ஆழ்வார் திரு. விலச்சினை பெற்றதை நாம் அறிவோம். இதனால் நறையூர் நம்பி இந்த ஆழ்வாருக்கு ஆசாரியராகின்றார். ஆசாரியருடைய திருநாமமே அநுசந்தேயமாதலால் திரு மந்திரமாகிய அத் திருநாமத்தைத் தாமும் அநுசந்தித்துப் பிறருக்கும் கற்பிப்பதாகப் பேசுகின் றார்.

இத் திருமொழியில் பலநிலை எம்பெருமான்களை நினைவு கூர்கின்றார். வராக அவதாரத்தில் பூமியைக் காத்தவன்; இராமனாக வந்து இலங்கையைப் பாழ். படுத்தியவன்; மாவலியின் செருக்கை அடக்கினவன்; திருக் குடந்தையில் கண்வளர்பவன் (1). காளியனை அடக்கி யவன்; வராக ருபியாய் பூமிப்பிராட்டியைக் காத்தவன்; திரிவிக் கிரமாவதாரத்தில் பூமியைச் சுவாதீனப் படுத்திக் கொண்டவன் (2). குவலயா பீடத்தைக் கொன்றவன்; கடலைக் கடைந்து தேவர்கட்கு அமுதளித்தவன்; அதில் வந்த பெண் அமுதைத் (இலக்குமி) தனதாக்கிக் கொண்ட வன்; யசோதைப் பிரராட்டி பலநாள் சேமித்து வைத் திருந்த வெண்ணெயை வெள்.காமல் களவு செய்து உண்டவன் (3) காஞ்சித் திருப்பாடகத்தில் பாண்டவ துTதனாய் வீற்றிருப்பவன்; இராவணனைக் கொன்று வீடணனை ஏற்றுக் கொண்டவன்.