பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பரகாலன் பைந்தமிழ்

கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாய்க் கவித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் கல்மாரியினின்றும் காத்தவன்; ஏழு காளைகளை அடக்கிப் பின்னைப் பிராட்டியை மணந்து கொண்டவன்; இலங்கை அரக்கர் களை யமனுக்கு விருந்தாக அளித்தவன் (5). பூமி முதலிய அண்டங்களை இடையறாது நிலைநிற்கச் செய்தவன்; கோவர்த்தனத்தைக் குடையாக ஏந்தினவன் (7, 8). பூமிப் பிராட்டியார், பெரிய பிராட்டியார், பிரமன், இந்திரன், சிவன் மற்றுமுள்ள தேவர்கட்கெல்லாம் நாயகன் (9). இந்த நிலைகளிலெல்லாம் காணப்படும் தேனும் பாலும் அமுதுமாய திருமாவின் திருநாமம் நமோ நாரணமாகும். 'நம்முடைய வினைகள் தீர நானும் இத்திருநாமத்தைச் சொன்னேன்; நீங்களும் சொல்லுங்கள்' எள்று வைணவர் கள் கூட்டத்தை நோக்கிக் கூறுகின்றார் (6, 9). இங்ங்னம் நாமத்தை நாவினால் நவிற்றி நெஞ்சில் நிறுத்தினால் எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டவராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார் இத்திருமொழியை.

கண்ணபுரத்துத் திருமொழி (8.10) : எட்டெழுத்து மந்திரமாகிய பெரிய திருமந்திரத்தில் தாம் சாரமாக நம்பிக்கை பண்ணின பொருட் சிறப்பு பாகவத சேஷத் துவமே' என்பதை ஒரு பாசுரத்தில் (8. 10:3) வெளியிடு

கின்றார்.

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை.

என்பதால் பாகவதர்கட்கு அடிமை சொல்லப்பட்டி ருத்தலைக் காணலாம்.