பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பரகாலன் பைந்தமிழ்

`ए५

அருள்மாரி யரட்டமுக்கி அடையார்சீயம்

......பரகாலன் கலியன் (3. 4:10)

கலிகன்றி (3. 2:10)

என்ற பாசுரப் பகுதிகள் இவற்றைத் தெரிவிக்கின்றன. இவர் பெருஞ்சேனையையுடையவர், யானைப்படை குதிரைப்படைகளையுடையவர், வாட்போரில் பகைவர் களின் உடல் துணிக்க வல்லவர் என்பன போன்ற தம் சேனையைச் சிறப்பித்துப் பேசும் செய்களை,

வாள்திறல், தானை

மங்கையர் தலைன் (10.9:10)

அமரில் கடமா

களியானை வல்லான் (2,4:10)

கடமாருங் கருங்களிறு வல்லான்

வெல்போர்க் கலிகன்றி (2.5:10)

ஆடல் மா வலவன் (5.8:10)

வாமான்தேர்ப் பரகாலன் (7.4:10)

ஆலுமா வலவன் கலிகன்றி (9.10:18)

மருவலர்தம் உடல்துணிய

வாள் வீசும் பரகாலன் (3.9:10)

என்ற பாசுரப் பகுதிகளால் அறியலாம்.

இவரது பெருஞ்செல்வ நிலையும், பெரிய வள்ளண் மையும், அதனால் புலவர் போற்றும் புகழும், பொய் மொழியொன்றில்லாத இவரது மெய்ம்மைத் திறமும், கைம்மாறு கருதாது மாநிலத்தார்க்கு வழங்கும் மாரி போன்ற இவரது பேரருளும், இவரது தமிழ்ப் புலமையும்