பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் வாழ்க்கை - அகச்சான்றுகள் 29

இவரது கவிபாடும் திறனும் சில பாசுரங்களால் அறியப் பெறும்.

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும்

விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்

இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்தருளும்

எந்தை (1,4:7)

கற்றார் பரவும் மங்கையர்கோன்

காரார் புயற் ைகலிகன்றி (5. 1: 10)

பாரணிந்த தொல்புகழான் (4.4:10)

பொய்ம்மொழியொன் றில்லாத

மெய்ம்மையான் (6.6:10)

அருள்மாரி (3.4: 10, 4.2:10, 8.6:10) இருந்தமிழ் நூற் புலவன் (1.7:10)

பாடேன் தொண்டர் தம்மைக்

கவிப்பனுவல் கொண்டு (7.2:2)

என்ற பாசுரங்களால் இவை அறியப்பெறும்.

மேலும் இவர் மனைவிமக்கள் பலருடையவராகவும், வேட்டையாடுவதில் விருப்பமிக்கிருந்தவராகவும், அரசர் முதலிய பிறர்க்குப் பெரிதும் உழைத்து தம் வாணாளின் ஒரு பகுதியைவீணாகக் கழித்தவராகவும், பரம்பரையா கவே திருமாற்கடியமானவர் குலத்தில் உதித்தவராகவும், தம் தாய் தந்தையர் காலம் சென்ற பின்னர் தாம் அவ்வடிமைத் திறத்தில் முனைந்து நின்றவராகவும், அதனால் தெள்ளியராய்த் தி ரு ம .ா ல் அருளைச் சிக்கெனப் பெற்றவராகவும், தம் குடும்பத்தை முற்றத் துறந்து திருப்பதிகள்தோறும் பாடித் திருமாலடியா ரென்று தேசமறியத் திரிந்தனராகவும், தம்முடைய