பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் வாழ்க்கை - அகச்சான்றுகள் 3互

பிரிந்தேன் பெற்றமக்கள் பெண்டிர் என்று

இவர் பின் உதவாது அறிந்தேன். (6.2:4)

தேசம் அறிய உமக்கே

ஆளாய்த் திரிகின்றேமுக்கு (4. 9:4) நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய்க் கலியன்

ஒலிசெய் தமிழ்மாலை (7.1:10)

என்ற பாசுரப்பகுதிகளால் இவற்றை அறியலாம்.

இவர் திருமால் அடிமையில் சிறந்து விளங்கியவர் என்பதையும் மறந்தும் புறந்தொழா மாண்புடையாளர் என்பதையும் இவரது திருவாக்கினைக் கொண்டே தெளியலாம்.

பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் (9.5:10)

தேசம் அறிய உமக்கே

ஆளாய்த் திரிகின் றோமுக்கு (4. 9:4) வேம்பின் புழு வேம்பு அன்றி

உண்ணாது அடியேன் நான்பின்னும் உன்சேவடி

அன்றி. நயவேன் (11. 8:7) மற்று ஒர் தெய்வம் எண்ணேன்;

உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன் பெற்றதும் பிறவாமை (6.3:5) கூறேன் நெஞ்சுதன்னால்

குணங்கொண்டு மற்றோர் தெய்வம் தேறேன் உன்னையல்லால்

திருவிண் ணகரானே! (6.3:7)

என்ற பாசுரப் பகுதிகளில் இவற்றைக் காணலாம்.