பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க வியன் வாழ்க்கை - அகச்சான்றுகள் 3、

பேரானை, குடந்தைப்

பெருமானை இலங்கொளிசேர் வாரார் வனமுளையாள்

மலர்மங்கை நாயகனை ஆரா இன்னமுதை

தென் அழுந்தையில் மன்னிநின்ற காரார் கருமுகிலைக்

கண்டு களிந்தேனே."

என்று எக்களிப்புடன் பாடுவதைக் காணலாம்.

எம்பெருமான் ஆசாரியனாக நின்று திருமந்திர உபதேசம் பெற்ற ஆழ்வார்,

தூவிசேர் அன்னம் துணையொடு புணரும்

சூழ்புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான்கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்’

என்று பாடுகின்றார். 'ஆரா அமுதப் பெருமானைத் திருக்குடந்தையில் சேவித்தேன்; தீய பொருளைப் பேசின வாயாலே திருமந்திரந்தை அநுசந்தித்து ஸ்வரூபம் பெற்றேன்' என்று மகிழ்கின்றார். 'துரவிசேர் அன்னம் துணையொடு புணரும்' என்றது. பெருமாளும் பிராட்டி யாரும் பிரியாது வாழும் சேர்த்தியைச் சொன்னபடி யாகும். ஈண்டு அன்னம் என்றது எம்பெருமானை, துணை என்றது பிராட்டியை. நம்முடைய குற்றங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பிப்பவனும்

பிரியாது வாழும் குடந்தை என்பது குறிப்பு.

6. பெரி. திரு. 7.6:9 7. டிெ 1. 1:2

ப.கா.-3