பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பரகாலன் பைந்தமிழ்

முதல் திருமொழியில் இங்ங்னம் பேசிய ஆழ்வார் இறுதிப் பிரபந்தமாகிய திருநெடுந்தாண்டகத்திலும் தண்குடந்தைக் கிடந்த மாலை, நெடியானை, அடி நாயேன் நினைந்திட்டேனே' என்று நாயகி நிலையில் திருக்குடந்தைக் கிடந்த மாலைப் பேசித் தலைக்கட்டுவ தால் இப்பெருமான்மீது இந்த ஆழ்வார் கொண்டுள்ள மிக்க ஆதரம் உறுதிப்படுகின்றது. பரகால நாயகி நிலை யிலும்,

பெற்றேன்வாய்ச் சொல்இறையும் பேசக் கேளான்

பேர்பாடி தன்குடந்தை நகரும் பாடி பொற்றா மரைக்கயம்நீர் ஆடப் போனாள்;

பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே."

1பேர்-திருப்பேர் நகர், பொற்றாமரைக்கயம்.

திருக்குளம்; பொரு-ஒப்புi

என்று தாய்ப் பாசுரமாகப் பேசுவர் ஆழ்வார். இங்கு ஆழ்வார் நாயகி எம்பெருமானையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகின்றாள் என்பது பொருந்தும். அகப் பொருளில் புணர்ச்சியைச் சுனை ஆடல்' என்றும் "நீராட்டம்' என்று பேசுகின்றோம் அல்லவா? எம்பெரு, மானுடன் கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயத்திற்கு நீராடப் போவதாகச் சொல்லுகின்றாள். இங்கு இன்சுவைமிக்க பெரிய வாச்சான் ;பிள்ளையின் வியாக்கியானம்; மகன் அணி யரங்கம் ஆடுதுமே என்று ஊரைச் சொன்னாள் (திரு. நெடுந்-23). தான் பொற்றாரைக் கயம் என்று பெரிய பெருமாளைச் சொல்லுகின்றாள். தயரதன் பெற்ற

8. திருநெடுந்-29 9. டிெ 19