பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பரகாலன் பைந்தமிழ்

கற்போர் புரிசைக் கனக மாளிகை நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும் செல்வம் மல்கு தென்திருக் குடந்தை. அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடுஅரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த பரம! நின் அடியினைப் பணிவன் வரும்இடர் அகல மாற்றோ வினையே’

|குன்றா-குறையாத மது-தேன்; படப்பை-தோட் ಶ್ಗ பொன்னி-காவிரி; மணி-இரத்தினம்; கழனி-வயல்,கனகம்-பொன்; துவக்கும்-தொடும்; மந்திரம்-வேதம்; அமளி-படுக்கை; வினை-சம் சார்த் துன்பங்கள்; மாற்று-போக்கியருள்க)

என்ற அடிகளில் ஆர்த்தராய்ச் சரணம் புகுவதைக் கண்டு மகிழலாம்.

ஞானசம்பந்தர் சந்திப்பு: சோழநாட்டுத் திருப் பதிகளை மங்களாசாசனம் செய்து வருகையில் சீகாழியில் இவருடைய சீடர்கள் வழக்கப்படி 'நாலுகவிப் பெருமாள் வந்தார் அருள் மாரி வந்தார்' " அரட்ட முக்கி வந்தார்’ 'ஆலிநாடர் வந்தார்', 'மங்கை வேந்தர் வந்தார்', 'பர காலர் வந்தார் முதலான விருதுகளை ஏந்திக் கொண்டும், இந்த விருதுகளை வாயால் முழங்கிக்கொண்டும் ஆழ் வாருக்கு முன்னே செல்வாராயினர். அப்போது அவ்வூரிலி ருந்த திருஞானசம்பந்தப் பெருமானின் அடியார்கள் வந்து எங்கள் நாயனார் இருக்குமிடத்தில் நீங்கள் விருது ஒதிச் செல்லலாகாது’ என்று தடுத்து நிறுத்தினர். ஆழ் வாரும், உங்கள் நாயனாருடன் தர்க்கிப்போம் என்று அவ்வூர்த் தாடாளப் பெருமானை எழுந்தருள்வித்துக் கொண்டு சம்பந்தப் பெருமான் இருக்கும் இடம் சென்

10. திருஎழுக்-அடி (37-45).