பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் வாழ்க்கை - அகச்சான்றுகள் 37

றார். வாதப்போர் செய்யத் தொடங்குகையில் நாயனார் ஆழ்வாரை நோக்கி உமது கவித்திறத்தை யான் காணு மாறு முந்துற முன்னம் ஒரு கவிபாடும்' என்று சொல்ல, உடனே ஆழ்வாரும் ஒரு குறளாய் இருநிலம் (பெரி. திரு. 3.4) என்னும் திருமொழியை அருளிச் செய்தார் என்றும், அதில் பல சுருதிப்பாசுரத்தில் தம் விருதுகளெல்லாம் தோன்றும் படி,

செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை அங்கமலத் தடவயல் சூழ்

ஆலி நாடன் அருள்மாரி அரட் டுஅமுக்கி

அடையார் சீயம் கொங்குமலர்க் குழலியர்வேள்

மங்கை வேந்தன் கொற்றவே ல் பரகாலன்

கலியன் சொன்ன சங்கமுகத் தமிழ்மாலை

பத்தும் வல்லார் தடங்கடல் சூழ் உலகுக்குத்

தலைவர் தாமே.14

என்று பாடினார் என்றும் சம்பந்தரும் இதைக்கேட்டு மறு மொழி சொல்ல இயலாமல் உமக்கு இவ்விருதுகள் யாவும் பொருந்தும்' என்று கூறிச் சென்றார் என்றும், அப்படிப் போகும்போது தமது வேலாயுதத்தை இவருக்குக் காணிக் கையாகக் கொடுத்துச் சென்றார் என்றும் குருபரம்பரை யில் ஒரு வரலாறு உண்டு. சைவ இலக்கிய வரலாற்றில்

11. பெரி-திரு. 3,4:10