பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப் பயணம் 43

கரைசெய் மாக்கடல் கிடந்தவன்

கணைகழல் அமரர்கள் தொழுதேத்த அரைசெய் மேகலை அவர்மகள்

அவளோடும் அமர்ந்த நல் இமயத்து வரைசெய் மாக்களிறு இள வெதிர்

வளர்முளை அளை மிகுதேன் தோய்த்துப் பிரச வாரிதன் இளம்பிடிக்கு

அருள் செய்யும் பிரிதிசென்று அடைநெஞ்சே (5) =

[மாக்கடல்-திருப்பாற்கடல்; அரை - இடுப்பு: அவர் மகள்-பெரிய பிராட்டியார். களிறு-ஆண் யானை, வெதிர்-மூங்கில்; பிரசம்-தேன்; பி.டிபெண்யானை) இஃது ஐந்தாவது பாசுரம்: பாடலின் முதல் இரண்டடிகள் எம்பெருமானையும் பின்னிரண்டடிகள் இயற்கைச் சூழ்நிலையையும் விளக்குவதைக் காணலாம்.

சகுந்தலையை இங்குத்தான் திருமணம் புரிந்து கொண்டதாகவும் செவிவழிச் ச்ெய்திகள் வழங்கி வருகின்றன. குளிர் காலத்தில் பதரிநாராயணன் திருக்கோயில் மூடப்பெறுங்கால் அங்குள்ள உற்சவர் இங்கு வந்து ஆறு திங்கள் தங்கி வழி பாடுகள் பெறுவர். இங்குள்ள் சங்கரமடத்தில் நரசிம்ம சாலிக்கிராமம் உள்ளது; திருத்தலப் பயணிகள் இதனை வழிபடுவர். இங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானின் திருநாமம்: பரமபுருடன்; தாயார் பரிமளவல்லி நாச்சியார், பெரும்ான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்; புயங்கசயனம். (இந்த ஆசிரியரின் வடகாட்டுத் திருப்பதிகள்-என்ற நூலில் 8-ஆம் கட்டுரை காண்க. பெரி. திரு. 1.2 (பதிகம்). 2. இப்பாசுரத்திலுள்ள காட்சியை பூதத்தார் பாசுரத்திலும் (இரண் திரு. 75), கம்பன்

பாடலிலும் (அயோ. சித்திர கூடம்-10) கண்டு மகிழலாம்.