பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 45

பிரிதி எம்பெருமான் மேற்குறிப்பிட்ட சூழ்நிலை யில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் யார்? வாலியை வானுலகிற்கு அனுப்பியவனும், வானர சேனை கொண்டு சேது அமைந்து இலங்கையை நாசம் செய்தவனு மான இராமன் (1, 2). உடுக்கை இடையையும், சுருண்ட கூந்தலையும், பளிச்சென்று இயங்கும் பற்களையும் உடைய பின்னைப் பிராட்டியின் பொருட்டு ஏழுகாளை களை அடக்கிய கண்ணன் எழுந்தருளியிருக்கும் இடம் இதுவேயாகும் (3). ஒப்பற்ற வீரனாகிய இரணியனின் மார்டைப் பிளந்த நரசிம்மப் பெருமானும் இங்கு எழுந் தருளியுள்ளான் (4). திருவனந்தாழ்வானின் சயனத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமானும் இவனே. (5). இவன் திருவடிகளை இமையோர்கள் நான்முகனை முன்னிட்டு ஆயிரம் பெயர்களால் அருச்சிக்கின்றனர். (7,8), இங்ங்னம் அர்ச்சையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஆழ் வார் வியூக நிலை எம்பெருமானாகவும், அவதார நிலை எம்பெருமான்களாகவும் கண்டு களிக்கிள்றார். எந்த நிலைகளில் பாடிப்பரவினாலும் அங்ங்னம் பாடிப் பரவப் பெறுபவன் பரமபத நாதனே என்பது வைணவக் கொள்கையாகும். இந்த எம்பெருமானை சேவித்த ஆழ்வார் வதரியை அடைகின்றார். வதரி மலைக்கு

3. வதரி: திருவதரி இமயமலையிலுள்ள ஒரு திவ்விய

தேசம். இது கட்ல் மட்டத்திற்கு 10380 அடி உயரத்தில் உள்ளது. ஹரித்துவாரத்திலிருந்து 202 கல் தொலைவிலுள்ளது. அண்மையில் உத் திரப் பிரதேச அரசு வதரி வ்ரை மலைச்சாலையை அமைத்துள்ளது. ஹரித்துவாரம் (924 அடி உய ரம்), ரிஷிகேசம் (1116அடி உயரம்), அநுமன் சட்டி (8000 அடி உயரம்)- ஆகிய இடங்கள் வழி LiFడి வதரியை அடைய வேண்டும், வதரி (இலந்தைமரம்)யின் அடியில்தான் வதரி நாரா யணன் எழுந்தருளியுள்ளான்-தவசி வடிவில் திரு வாழி திருச்சங்கு தாங்கிய நிலையில். எம்பெரு