பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பரகாலன் பைந்தமிழ்

ஒன்றும் (1.3), வதரிகாச்சிரமத்திற்கு ஒன்றுமாக (1.4). இரண்டு திருமொழிகளால் வதரி நாராயணனை மங்களாசாசனம் செய்துள்ளார் ஆழ்வார்.

வதரித்திருமலை: வதரி நாராயணன் உகந்தருளின இடம் வதரித்திருமலை. அதுவும் ஆழ்வாருக்கு உவப்பா கின்றது. 'திருவேங்கடமாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே (திருவாய் 3.3:8) என்று கூறிய நம்மாழ் வாரைப் பின் பற்றி இவரும் மலையையே சேவிக்கின்றார். பாரோர் புகழும் வதரி' என்று சிறிய திருமடலில் மலைக் குப் புகழ்பாடியவர், பெரிய திருமொழி இம்மலைக்குரிய (1.3) பாசுரந்தோறும் வதரி வணங்குதுமே வதரி வணங் குதுமே என்று குறிப்பிடுகின்றார். வதரி இருக்கும் இமய மலைப் பகுதியோ கண்டியூர் அரங்கம், மெய்யம், கச்சி பேர் மல்லை" என்னும் திருப்பதிகள் போலன்றி மிக்க சிரமத்துடன் அடையக்கூடிய இடமாதலால் உடல் பாங் காக இருக்கும் பொழுதே சென்று சேவிக்க வேண்டும் என்று ஆற்றுப்படுத்துகின்றார். வதரியை மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி (1.3:2), ஆயிரம் நாமம் சொல்வி, வெளிகொள் வண்டு பண்கள் பாடும் வதரி' (3) 'வாளை பாயும் தண் தடம் சூழ் வதர் (4) என்று மலை யின் இயற்கைக் காட்சியில் உள்ளத்தைப் பறிகொடுக்கின் றார். 'வண்டு பாடும் தண் துழாயான் வதரி (5) என்று எம் பெருமான் திருக்கோயில் கொண்டுள்ள இடம் வதரி

மான் வதரிநாராயணன்: இருந்த திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார்: அரவிந்தவல்லி நாச்சியார்: (பெரி. திரு. 1.3; 1.4 பதிகங்கள் சிறிய திருமடல்(39) (மேலும் விவரங் கட்கு இந்த ஆசிரியரின் வடகாட்டுத் திருப்பதிகள்' என்ற நூலில் 6-வது கட்டுரை காண்க). 4. சிறிய திருமடல்-கண்ணி-47 .

5. திருக்குறுந்- 19