பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 金德

பல்வேறு இரத்தினக்கற்களையும் உருட்டிக் கொண்டு வருவதைக் காணலாம் (4), இங்குத்தான் அண்டத்தைச் சுமக்கும் மேருமலையின் உச்சியிலிருந்து கங்கை இழிகின்றது (5).

கபில முனிவரின் சாபத்தால் நீறாய்க் கிடந்த தம் முன்னோர்களான சகரபுத்திரர்கள் தூய்மையடைவான் வேண்டி பகீரதன் தவம்புரிந்து கங்கையைக் கொணருங் கால், அது பெரியதொரு மலையைப் பிளந்து கொண்டு அங்குள்ள யானைகளை அடித்துக் கொண்டு வருவதைக் காணக் கூடிய இடம் (6): ஒரு முகமாக வந்து இழிந்தால் பெரு விசையோடு வரும் மிடுக்கைக் கடல் பொறாதென்று கருதிய தேவர்களின் பிரார்த்தனைக் கிணங்க அது பல முகமாகப் பெருகி வருவதைக் காணலாம் (7): இந்தக் கங்கையின் வரலாற்றையே விசுவாமித்திரன் இராமலக்கு மணர்கட்குச் சொல்லியதாகுப் (8)". பகிரதன் கங்கையை அவதரிப்பித்தபோது அது பிரமலோகத்தை ஊடறுத் துக் கொண்டு ஆகாயத்தினின்றும் இழிந்து அங்கிருந்து பூமி நடுங்கும்படியாகப் பிரவகித்துத் தெளிந்த நீரை யுடைய கங்கை செல்லும் இடம் (9).

எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்: இந்தக் கரை யின்மீதுள்ள ஆச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் யாவன்? பூமிப் பிராட்டியின் பொருட்டு வராக அவதாரம் எடுத்தவன்; பெரிய பிராட்டியின் பொருட்டு இராமனாக வந்தவன் (1): மாயமானாக வந்த மாரீசனை வானுலகிற்கு அனுப்பிய மாவீரன் (2): இராமாவதாரத் தில் இலங்கையரசன் இராவணன், அரக்கர்குலம் இவர் கள் யாவரும் ஒழியும்படியாகத் தீரச் செயல்கள் புரிந்

6. கம்ப. பாலகா. அகலிகை 33-61 பாடல்கள்.

LJ. G.-4