உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மீகம்

பரா, அபரா என வித்தைகள் இரண்டு. பரா ஆன்மீக வித்தை; அபரா வெறும் சாப்பாட்டு வித்தை. பரா, தேவயானம்; அபரா, பிதுர்யானம், எனவும் சொல்லப்படும். யானம் எனின் ஆன்மீகத்தை அடைவதற்கான நெறிமுறைகள்.

ஆத்மா, ஒம், பிரணவம், பிரம்மம் என்பன ஒரு பொருளைக் குறித்து வந்த சொற்கள். தேவயானம், ஆத்மாவை அறிந்து அடைந்து ஆனந்தப்படுவதற்காக அமைந்த மார்க்கம். பிதுர்யானம், என்பது தொன்றுதொட்டின்றுகாறும் மக்கள் நடைமுறையில் உள்ள கோவில் குளம், பூசை, தோத்திரம் விழா முதலிய பாவனை விவகாரங்கள் தாம்; வெறும் சாப்பாட்டு வித்தைதான் என்பதை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.

ஆத்மாவை அறியும் வழியை, உபநிசத் காலத்திலேயே மற்ற - ஆரியரல்லாத - மக்கள் அறியாவாறு மறைக்கப் பட்டது. விக்கிரக ஆராதனையெனும் அபரா, - (அதாவது) பிதுர்யான மார்க்கத்தைத்தான் புராண, காவிய தோத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஐயமிருந்தால் சாந்தோக்கிய உபநிசத் எட்டாம் அத்யாயம் பார்த்து அறிக.

மும்மலம்: காமம், வெகுளி, மயக்கம். இவை ஒரு மனிதனின் உட்பகைகள் ; சத்வ , ரஜஸ், தமஸ்: முக்குணங்கள்.

ஆற்றல்சால் அறிவுள்ள ஒரு மனிதன், மும்மலங்களை வென்றெடுத்து சத்வ குணம் ஒன்றினை மட்டும் மேற்கொண்டொழுகி, உற்றநோய் நோன்றுயிர்க்குறு கண் செய்யாது சத்தியத்தை நோக்கி வாழ்க்கையை இயக்குவதே தேவயானம். இதிலிருந்து அவன் பெறுவது சிரேயஸ். அதாவது அழியாத புகழ்; இதுதான் ஆன்மீகம் , அமரன் எனத் தன்னுயிர் தானறப் பெறும் தெய்வீக நிலை.