பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : செவ்வேள் (9) - - 97 சண்டையிட்டன, இருவர் கொண்டைப் பூக்களினும் மொய்த்திருந்த குன்றத்து வண்டுகளும், இருபகுதியாகப் பிரிந்து தமக்குள் மோதலாயின என்பதாகும். _. - நின் தவறிலை', 'மாணலம் உண்கோ'; 'திருவுடையார்’ என்னுஞ் சொற்கள் குறிப்பு மொழிகள். - தோழிமார் மோதினார். தார்தார் பிணக்குவார்; கண்ணியோச்சித் தடுமாறுவார்.45 மார்பணி கொங்கைவார் மத்திகையாப் புடைப்பார்; கோதை வரிப்பந்து கொண்டெறிவார்; பேதை மடநோக்கம் பிறிதாக, ஊத - நுடங்கும் நொ சிநுசுப்பார் நூழில் தலைக்கொள்ளக் கயம்படு கமழ்சென்னிக் களிற்றியல்கைம் மாறுவார் 50 வயம்படு பரிப்புரவி மார்க்கம் வருவார்; - தேரணி அணிகயிறு தெரிபு வருவார்; வரிசிலை வளைய மார்புற வாங்குவார்; வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்; r தோள்வளை ஆழி சுழற்றுவார் . 55 மென்சீர் மயிலிய லவர்; - - - . . . இந் நிகழ்ச்சியை இருதேவியரின் தோழியரும் கண்டனர். அவர்களும், தமக்குள் இரு சாராராகப் பிரிந்து சண்ட்ையிடத் தொடங்கினர் என்பது இப்பகுதி. - - வள்ளிநாயகியும் தேவானைப்பிராட்டியும் தத்தம் மார்பிடத்து மாலையைப் பறித்துத் தமக்குள்அடித்துக்கொண்டனர். தலைக் கண்ணிகளை ஓங்கியபடி மாறுபட்டாரை அடிக்க முற்பட்டனர். மார்பிடத்து அணிந்திருக்கும் கொங்கைக் கச்சினைச் சாட்டை வாராகப் பற்றிக்கொண்டு புடைத்துக் கொண்டனர். மாலை களையும், பூப்பந்துகளையும் ஒருவருக் கொருவர் சுழற்றி எறிந்து கொண்டனர். . இதனாற் பேதைமை கொண்ட தேவானைப் பிராட்டியின் நொக்கமும் வேறுபட்டது. அவள் சோர்வுற்றாள். வாயால் ஊதும் காற்றுக்கே வளைந்தொடிவது போன்ற நுண்ணிடை 'களை உடையாரான அப் பெண்கள், தம்முள் நெருங்கிப் போரிடலை அடுத்துத் தொடங்கினர். - குளத்துநீருள் மூழ்கித் திளைக்கும், மதநீர் நாற்றம் வீசுகின்ற தலையினையுடைய, களிறுகளின் போரிடும் தகைமையைப் பெற்றவர்களேபோல, ஒருவருக்கொருவர் கைவளைத்துப் பற்றியும் போரிடத் தொடங்கினர். -

  1. .