பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hಿeತತೀತಿ-೨೨೬೬೬೬೭–೨೬ அந்த வெற்றிக்களிப்பினாலே வள்ளிநாயகியின் தோழிமார் மகிழ்ச்சி கொண்டனர். காவலையுடைய சுனைநீருட் குதித்துச் சிலர் நீராடத் தொடங்கினர். பாறைகளாற் சூழப்பெற்ற அரிய சுனையிடத்து மலர்களிற் சென்று தேனுண்ணும் வண்டு களைப்போல, நரம்புக்க்ருவிகளை இயக்கிச் சிலர் இசைப்பா ராயினர். ஆடுகின்ற மயில்களைப் போலத் தம் தலைமயிரையே தோகைகளைப் போல விரித்தவராகச் சிலர் கூத்தும் ஆடத் தொடங்கினர். குயில்களைப் போலச் சிலர் கூவவும் தொடங்கினர். - இவற்றைக் கண்டு தேவானைப் பிராட்டியின் தோழிமார் மேலும் துன்புறுவாராயினர். . - குறிஞ்சிக்குரிய குன்றவரின் மறத்தன்மை பொருந்திய வள்ளிநாயகியின் தோழிமார் சுற்றம் திறமையோடு போரிட்டு வெற்றி பெற்றதனாலே, வெற்றி வேலையுடையவனாகிய குமரப் பெருமானுக்குத் தண்ணிய பரங்குன்றமும் பொருத்தமுடையதாக ஆயிற்று. - - சொற்பொருள் : வாள் - ஒளி, வயம் - வெற்றிச் சிறப்பு. மொய்ம்பு - ஆற்றல்.கடி - காவல் அறை - பாறை, நறவு - தேன். நரம்பு - நரம்புக் கருவிகள். தொகை - தோகை. கோகுலம் - குயில். ஆகுலம் - துன்பம். வித்தகம் திறமை, தும்பை போர் ஒரு திணையுமாம்; அது பகைவரோடு போரிடலை நினைத்துத் தும்பைப் பூவைச் சூடுதலாம். ... " . படாகை நிலைபெற்றது கடுஞ்சூர் மாமுதல் தடிந்தறுத்தவேல் 70 அடுபோராள! நின் குன்றின்மிசை ஆடல் நவின்றோர் அவர்போர் செறுப்பவும்: பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்: வல்லாரை வல்லார் செறுப்பவும்: அல்லாரை அல்லார் செறுப்பவும்: - | ஓர் சொல்லாய்ச் 75 செம்மைப் புதுப்புனல் - தடாகம் ஏற்றதண்சுனைப் பாங்கர்ப் படாகை நின்றன்று; - கொடியவனாகிய சூரன், கடல் நடுவுள் உருக்கரந்து நின்ற மாமரத்தை வெட்டிச் சிதைத்தலின் மூலமாக ஒளிமிகுந்த, வெற்றி வேலினைக் கொண்ட போராடும் ஆற்றலுடைய முருகப் பெருமானே! - - நின் பரன்குன்றின்மேல் தொடங்கிய போராட்டம் அத் துடனும் நிற்கவில்லை. குறமகளிருள் ஆடல்வல்லவர் தேவ மகளிருள் ஆடல்வல்லவருடன் போரிட்டு அவரை வென்றனர். s