பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (10) 101 விளக்கம் : வெற்றிவேலோனாகிய பெருமான், தேவியரும், அவர் தம் சுற்றத்தவரும் ஒருவரோடொருவர் போரிட்டதனை வேடிக்கையாகக் கண்டு மகிழ்ந்தான். கற்பு மணம், அன்பு மணம் என்னும் இருநெறியையும் ஏற்பானேபோலத் தேவியர் இருவருக்கும் சமாதானஞ் சொல்லி, இருவரையும் சமமாகவே ஏற்றும் விளங்கினான். அவனடி தொழுவார் என்றும் இல்லற இன்பத்தில் களிப்பினாலே திளைப்பார் என்பது இப்பாடலின் அறிவுரையாகும். - | - - பத்தாம் பாடல் തഖതun பாடியவர்: கரும்பிள்ளைப் பூதனார்; பண் வகுத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்; பண் : பாலையாழ். - * கார்கால வரவிற்கு முன்பாகத் திரும்புவேன்' என்று உறுதி கூறிப் பிரிந்தான் தலைவன். சொன்னபடி அவன் வராததனாலே தலைவியின் துயரம் மிகுதியாகின்றது. கார்காலம் தொடங்கி, வையைக்கண் புதுப்புனலும் வந்தது; அவன்தான் வந்தானிலன்' எனத் தலைவி நினைந்து வருந்துகின்றாள். தலைவியின் துயரமிகுதியைக் கருதினாள் தோழி, பாணனைத் தலைவனிடம் சென்று தலைவியின் நிலையை உரைத்து, விரைய மீளச் செய்யுமாறு தூதுவிடுக்கின்றாள், பாணன் தலைவனிடம் உரைப்பது ப்ோல அமைந்த பாடல் இது. . . - புதுப்புனல் வந்தது மலைவரை மாலை அழிபெயல் காலை செலவரைக் காணாக் கடல்த்லைக் கூட நிலவரையல்லல் நிழத்த விரிந்த பலவுறு போர்வைப் பருமணல் மூஉய் . விரியரி யானு முகிழ்விரி சினைய - 5 மாந்திந் தளிர்ெடு விழையிலை மயக்கி ஆய்ந்தளவா ஓசை அறையூஉப் பறையறையப் போந்தது வையைப் புனல்; - மலைப்பகுதிகளில் #ಣ நாளின் மாலைப்போதிற் பெரு மழை பெய்தது. மாலைவேளையில், எல்லை காணவியலாத கடலைச் சென்று அடைதற்குச் செல்லும் புது நீரின் செலவும் சமதளத்தில் தொடங்கியது. அந் நீர்ப்போக்கின் பகுதிகளிலுள்ள நிலப்பகுதிகளின் கோடைவெம்மைத்துயரமும் நீங்கியது. பரந்து, பலவாகச் செறிந்து, போர்வையைப் போல ஆற்றுப்போக்கில் கிடந்த பருமணற்பகுதிகளை முடியபடி, புதுப்புனலும் சென்றது. வரிவரியான அழகுடன் கூடிய வண்டுகள் ஊதுதலினாலே . . .” r