பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 . பரிபாடல் மூலமும் உரையும் - மொட்டுவிரிந்த மலர்கள் நிரம்பிய கிளைகளைக் கொண்ட மாவினது இனிய தளிரோடு, வாழையிலைகளையும் சிதைத்துப், புதுப்புனல் தன்னோடு கொண்டு வந்தது. புதுப்புனற் பெருக்கை ஆராய்ந்த காவலர்கள், உடைகரைகளை அடைக்க வருமாறு, ஊர்வரை அழைக்க முழங்கும் பறையறைதலின் முழக்கமும் எழுந்தது.இவ்வாறாக, மதுரைக்கண் வையையிடத்தே புதுப்புனல் வந்தது. . . - - சொற்பொருள் : மலைவரை - மலையிடத்து. அழிபெயல் - பெரும் பெயல் வரை - எல்லை. நிழத்த கவிய முய் - மூடி ஆ - அழகு. அரி - வண்டு; மயக்கி - சிதைத்து. - மக்கள் புறப்படல் புனல்மண்டி ஆடல் புரிவான் சனமண்டித் தாளித நொய்ந்நூற் சரணத்தர் மேகலை 10 ஏணிப் படுகால் இறுகிறுகத் தாளிடீஇ 薛 நெய்த்தோர் நிறவரக்கின் நீரெக்கி யாவையும் முத்துநீர்ச் சாந்தடைத்த மூஉய்த் தத்திப் புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும் - மிகவரினும் மீதினிய வேழப் பிணவும் 15 அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய்மாச் சகடமும் தண்டார் சிவிகையும் பண்ணி வகைவகை ஊழுழ் கதழ்புமூழ்த்து ஏறி - - புதுப்புனலின் வருகையை அறிந்தனர் மதுரை நகரத்து மக்கள். புதுப்புனலிடத்தே திளைத்து ஆடல் புரிவதற்கு விரும்பி அவர்கள் திரண்டெழுந்தனர். காலுக்கு இதந்தரும் மெல்லிய நூலாற் செய்யப்பெற்ற மிதியடிகளை அணிந்து கொண்டனர். மேகலை, ஏணிப்படுகால் என்பவற்றை இறுக்கமாகக் கட்டிப் பூட்டிட்டுக் கொண்டனர். இரத்தம்போன்ற செவ்வரக்கின் சாயநீரை நிரப்பிய பீச்சாங்குழல் முதலான பொருள்கள் யாவற்றையும் எடுத்துக் கொண்டனர். முத்தாகப் பனிநீரைச் சொரியும் செம்பு, சந்தனக் கலவைகளைக் கொண்ட பெட்டி முதலியவற்ைறையும் தம் கைக் கொண்டனர். தாவி ஏறுதற்கரியதும், பொங்கிய பிடரிமயிரை உடையது மான, புள்ளினைப்போல விரைவாகச் செல்லும் குதிரையும், மிகவிரைவாக் வந்தாலும் மெலிருக்க இனிதாக விளங்கும் பிடியானையும்; அழைத்தற்கரிய அழகினைக் கொண்ட எருதுகள் பூட்டிய வண்டியும்; கோவேறு கழுதையும் தெரிந்தெடுத்த குதிரை பூட்டிய வண்டியும்; தண்டு மரங்களோடு கூடிய சிவிகையும் ஆகிய இவற்றை அழகு செய்தனர்.