பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * வையை (10) . . - 103 இத்தகைய ஊர்திகளின்மேல்.விரைந்து வையைக்குச் செல்லக் கருதிய மக்கள், முறைமுறையே வகைவகையாக ஏறிக் கொண்டனர். - - சொற்பொருள் : மண்டி - ஒருவருக்கொருவர் முற்பட்டு நெருங்கி எழுந்து. தாளிதம் - தாள் + இதம் - தாளிக்கு இதம் தருவது. மேகலை - கலைக்கு மேலாக அணியும் அணி. ஏணிப்படுகால் - காலை உளப்படுத்தி விளங்கும் அணி. தாளிடீஇ - தாளிட்டு, நெய்தோர் - இரத்தம். பாண்டி - எருது. பாண்டில் - எருது பூட்டியவண்டிஅத்திரி-கோவேறு கழுதை,ஊழுழ்-முறை முறையாக கதழ்வு விரைவு மூழ்த்து - மொய்த்து. - - மந்த தியிற் சென்றோர் முதியர் இளையர் முகைப்பருவத்தர் - வதிமண வம்பலர் வாயவிழ்ந் தன்னார் 20 இருதிற மாந்தரும் இன்னினி யோரும் விரவுநரை, யோரும் வெறுநரையோரும் பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் அதிர்குரல் வித்தகர் ஆக்கிய தாள விதிகூட்டிய இளமென்னடை போலப் பதியெதிர்சென்று பருஉக்கரை நண்ணி - - 25 முதியரும், இளையரும், மலர்தலுக்குரிய மொட்டுப் பருவத்தினரும், புதுமணம் பெற்ற இதழ்விரிந்த புதுமலர் யாரும் ஆகிய பெண்டிர் அனைவரும் புறப்பட்டனர். உயர்ந்தோர், மக்கள் ஆகிய இருதிறத்து மாந்தரும், அவர்க்கு மிக்க இனிய வரான அவர்தம் காதலியரும், நரைவிரவிய பருவத் தோரும், முற்ற நரைத்த முதியோரும் புற்ப்படடனர். கற்புடைப் பெண்டிரும், பரத்தையரும், அவர்களின் பாங்கியரும் புறப் பட்டனர். குரல் அதிரச்செய்து இசை எழுப்புதலிலே வல்லவர் இசைத்த, தாளமுறையோடு பொருந்திய வாத்தியத்தின் மென்மையான நடையமைதிய்ைப் போல, ஊரவர் பலரும் வையையை எதிர்நோக்கிச் சென்றவராக, அதன் பெரிதான கரையினைச் சென்றடைந்தனர். சொற்பொருள் : வதி தங்கிய வம்பலர் புதுமலர் இருதிற மாந்தர் இரு திறத்துழுக்கள் பதிவத மாதர் - கற்புடைய மகளிர். இயம் - இசைக் கருவி. மென்னடை - மென்மையான நடை, மந்த கதி; இது மக்கள் நெருக்கத்தால் உண்டாயது என்று கொள்க. விரும்பும் புதுப்புனல் நீரணி காண்போர் திண்ட்ே ஊர்குவோர் பேரணி நிற்போர் பெரும்பூசல் தாக்குவோர் t f