பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! புலியூர்க்கேசிகன்-வையை (10) 107 பருத்தகோட்டினையுடைய யாழின் இசையோடு பாடலும் ஆடலுமாகிய இவை மக்களின் மனத்திண்மையை அழித்தன. இவ்வாறு தம் மனக்கோட்டை அழியப்பெற்றவர்கள், முன் இரண்டாக விளங்கிய நிலைமை கெட்டவராக, மனம் ஒன்று பட்டவராயினர். எனினும், காமப்போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதற்கும் இயலவில்லை. அங்குத் திரண்டிருந்த பலவகை யினரான மக்களிடையே தம் எண்ணத்தைச் செயற்படுத்துவதற்கு நாணினர். நிறைவேற்ற விரும்பிய பெருநசையாலும் பதை பதைத்தனர். எதிரிட்ட மன்னவரது படையணிகள் இரண்டும் ஒன்றையொன்று எதிரிட்டுத் தாக்கி நின்றவை, தமக்குள் பகையொழிந்தவாய் ஒன்றுபட்டுப் போதற்கு மன மிசைந்தும், போரிடற்கஞ்சி உடம்பட்டனர் என்னும் பழிச் சொல் எழுவதற்கு அஞ்சியவாகத் திகைப்புற்று நின்றவோர் நிலையைப் போலிருந்தது, அவர் நிலை. - - - g5fTLD விருப்பமானது மூண்டெழ, அதன் காரணமாகக் கண்ணிடத்துக் களிவெறியும் எழுந்த காலத்தும், ஊரிடத்து மிக்கெழும் அலருரைக்கு அஞ்சி, அதனை அடக்கியவராகவே நின்றனர். அவர் நின்ற தன்மை, கள்ளுண்டார் கள்ளின் களிவெறி தம்மைமீறி எழவும், அதனாற் பிறர் கூறும் பழியுரைக்கு அஞ்சித், தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்றிருந்தது. ஆனால், தம்முள்ளே வெறித்தன்மை பரவி எழ, அதனைத் தம் முயற்சி யினால் தம் உள்ளத்திற்குள்ளாகவே பரப்பியவராக, வெளிப் படும் வெறியுற்ற நிலைக்கு நடுங்கியவராக, உலகம் அலர் தூற்றத் தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போல, அவர் கொண்ட காமவெறியும், அடக்கியும் அடங்காதாய் உள்ளத்தே கனன்று கனன்று மிகலாயிற்று. - . இவ்வாறாகக் கள்வெறியோடு காமவெறியையும் கலந்து, தன் கரைகளை உடைக்கும் வெள்ளப்பெருக்கை, வையையின் புதுப்புனல் கொண்டு தருகின்றது. - சொற்பொருள் : கோடு-தண்டு பக்கம் இடம் அருப்பம்மனவலி. தண்டம் - படையணி. தலைஇ எதிரிட்டு நின்று. உடம்பாடு - சமாதானம்.ஒலி. அலர்ஒலி பழிச்சொல். கனைந்து - மூண்டு. களி - களியாகிய வெறி. உளை - வருத்தம். மதர் - வெறி. கரை வாங்கும் கரையுடைக்கும். r - விளக்கம் : புது வெள்ளம் கரையுடைத்துப் பெருகி வருவது போன்று, அதன்கண் நீராடச் சென்றவருட் சிலரான இளை ஞரிடத்தும் கன்னியரிடத்தும் காமவிருப்பமும் கரை கடந்து மிக்கெழுந்து பெருகுவதாயிற்று என்பதாம். இந்நிலை யினும், நீதான் தலைவியைப் பிரிந்துறைதல் பொருந்தாது என்பதாம். l