பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பரிபாடல் மூலமும் உரையும் நீராடும் தொழிலைவிட்டு, மதுரைக்கு மீண்டு செல்லும் செயலை மேற்கொண்டார். புதுநீர் ஆடலுக்காக அணிந்த நாளணிகளை அகற்றினர். மாலையிற் பூக்கும் பூக்களைச் சூடிக் கொண்டனர். தோள்வளை, தோடு, ஒளிசுடரும் அணிகள், முத்துமாலை முதலியவற்றை அணிந்து கொண்டனர். பாடுவாரது பாடற் பொருள்கள் நீர்த்தெய்வத்தினை வேண்டுவனவாகவும், நீர்த் தெய்வத்தின் புகழைப் போற்றுவனவாகவும் விளங்கின. ஆடல், மகளிரின் ஆடலுக்கு ஏற்ற சீருடனேதாளவொலிகளும் எழுந்தன. நறுமணங் கமழும் தேனை உண்ணக் கருதியவாய் வண்டினம் எல்லாம் புறப்பட்டன. பண்பாடுவாரைத் தொடர்ந்து வந்த வண்டுகள், அவர் எதிராக வந்து, அவர் வருந்துமாறு ரீங்காரப் பண்ணை எழுப்பின. மகளிர் கூந்தலிடத்து மலர்களிலுள்ள தேனைக் கொள்ளக் கருதிய வண்டுகள் தாமும் இனிய குரலோடு பாடின. இவ்வாறு அனைவரும் தென்திசை நோக்கிப் பயணமாயினர். வீசும் காற்றின் துணையோடு வந்து, குளிர்ந்த மலையிடத்துள்ள பூங்கொடிகள் வீழ்ந்து தங்கி மகிழும், பணியோடு கலந்து மேலெழும் புகையைப் போலக் காணப்படும், அழகிய மேன் மாடங்களின் உள்ளேயிருந்து, மகளிர் தெளித்துக் கொள்ளும் பனிநீரும், அவர் புகைக்கும் நறுமணப் புகையும் காற்றோடு கலந்து, காற்றையும் மணமுடையதாக மாறச் செய்யும். சொற்பொருள் : மாலிருள் - மயக்கந்தரும் செறிந்த இருள்' கால்சீப்ப நீக்க. நகைப் பூ மலர்ந்த பூ, பரவல் - வேண்டல், பழிச்சுதல் புகழ்த்ல் பாணி தாளம் அளி-வண்டு.பரிய வருந்த கதுப்பு கூந்தல், சூரல் - கற்றை கொண்டை கால் - காற்று. ஆவி புகை, நீராவியுமாம். - - விளக்கம் : மதுரைத் தெருவில் வீசும் காற்றும் மணத்தோடு விளங்கிய சிறப்பை இப்படிக் கூறுகின்றனர். - - செய்வினை ஓயற்க! இலம்படு புலவர் ஏற்றகை ளுெமரப் பொலஞ்சொரி வழுதியின் புனலிறை பரப்பிச். • செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயற்க வருந்தாது வ்ரும்புனல் விருந்தயர் கூடல் - - அருங்கறை அறையிசை வயிரியர் உரிமை 130 ஒருங்கமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே! - வறுமையுற்ற புலவர்களின் ஏந்திய கைகள் நிரம்புமாறு பொன்னைச் சொரிபவன் பாண்டியன். அவனுக்குரியதான இப் புனலும் தன் தலைவனின் புகழையே பரப்புகின்றன. வயலிடங் களுள் எல்லாம் பொன்னைப்போல விளங்கும் நென் மணிகளை இந் நீரும் பரப்புகின்றது. இவ்வாறு இது செய்யும் கொடைத் தொழில் என்றும் ஓயாதிருக்குமாக - -