பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 . - பரிபாடல் மூலமும் உரையும் போல் அல்லாமல், மதுரையையும் மதுரையைச் சார்ந்த வற்றையும் மற்றுமே பாடற்பொருளாகக்கொண்டு அமைந்த பாடல்களின் தொகை இத் தொகைநூல். பழஞ் செய்யுட்களுள் வரும் அகப்பொருள் பற்றிய நூற்கள் பலவும் ஐந்தினைப் பொருள்களைக் கொண்டவாய் வருவன; அவ்வாறே பரிபாடல் அமையவில்லை; தெய்வ வணக்கப் பாக்களாகவே அமைந்துள்ளன என்பர் ஒரு சாரார். குறிஞ்சிக் குரிய தெய்வம் முருகன், முல்லைக்குரிய தெய்வம் திருமால்; பாலைக்குரிய தெய்வம் கொற்றவை என்னும் காடு கிழாள்: மருதத்திற்கு மதுரை மாதெய்வம், நெய்தற்கு வையையாகிய நீர்த்தெய்வம் எனக்கொண்டே இந்நூலும் அமைந்துள்ளது. வையையைப் போற்றுஞ் செய்யுட்கள், அதனை ஆறாகக் கொண்டு, அதன் அழகை வியந்து போற்றாமல், அதனை ஒரு நீர்த் தெய்வமாகவே கொண்டு, அதனருளை வேண்டிப் பராவிப் போற்றுவதைத் தெளிவாகக் காணலாம். l பரிபாடல் இலக்கணம் "இது தொகை நிலை வகையால் போ' என்று சொல்லப் படும் இலக்கணமின்றி, எல்லாப் பாவிற்கும் பொதுவாக நிற்றற்குரியதாய், இன்பப்பொருளைப்பற்றிக்கூறும்.இது சிறுமை 25அடியும், பெருமை400அடியும் எல்லையாகக் கொண்டுவரும்” என்பது தொல்காப்பியம். •, “பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும்" என்பர் இளம்பூரணர். - "அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள், இன்பத்தையே பொருளாகக்கொண்டு கடவுள் வாழ்த்து, மலைவிளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வரும்” என்பர் பேராசிரியர். "தெய்வ வாழ்த்து உட்படக் காமப் பொருள் குறித்து உலகிலேயே பற்றி வரும்” என்பர் நச்சினார்க்கினியர் அகச் செய்திகள் இவ்வாறு, சான்றோர்கள் பரிபாடலுக்குரிய அமைதியை வரையறுத்து உரைப்பார்கள். அந்த வரையறைகளை யொட்டி விளங்குவனவே இப் பரிபாடற் பாக்கள் எனலாம். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாவினும் - உரிய தாகும் என்மனார் புலவர், (அகத், சூ, 51)